joe biden: வெள்ளை இன மேட்டிமை, வெறுப்பை வளர்க்கும் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை: ஜோ பிடன் திட்டவட்டம்

By Pothy RajFirst Published Sep 16, 2022, 9:49 AM IST
Highlights

வெள்ளை இன மேட்டிமை, வெறுப்பை வளர்க்கும் அனைத்து விதமான வன்முறை ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்

வெள்ளை இன மேட்டிமை, வெறுப்பை வளர்க்கும் அனைத்து விதமான வன்முறை ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்

அமெரிக்காவில் இந்தியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறித்தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில் அதிபர் ஜோ பிடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பிடன் பங்கேற்று பேசியதாவது:

மலேசியா அரசியலில் 29 ஆண்டுகள் அமைச்சராக கோலோச்சிய தமிழர் டத்தோ சாமிவேல் மறைந்தார்.. மோடி, ஸ்டாலின் இரங்கல்.

அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல், வெள்ளை இன மேட்டிமைத்தனம், வெறுப்பை வளர்க்கும் வன்முறை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்துதான் நான் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்தேன். மற்றவகையில் எனக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருந்ததில்லை.

நான் நல்லவிஷயங்களை செய்துகொண்டு, எனக்கு பிடித்த விஷயங்களை கற்பித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பற்றி கிறிஸ் மற்றும் டெலாவெரில் உள்ள சகாக்களுக்குத் தெரியும். அமெரிக்க ஒரு தேசமாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 

ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சியில் மக்கள் இது நாஜிக்கள் வாழும் நாடு என்று முழுக்கிட்டதைப் போல், இது அமெரிக்கா, அமெரிக்கா என்று மக்கள் முழுக்கமிடுவதையும், கையில் டார்ச்லைட்டுகள் ஏந்தி கோஷமிடுவதையும் பாரத்்து அதிர்ச்சி அடைந்தேன் கடவுளே இது அமெரிக்கா, சுதந்திரமான தேசத்தில் எப்படி இப்படி நடக்கிறது என்று வியந்தேன்

அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கியப் பதவி

2020ம் ஆண்டில் அமெரிக்காவில் வெறுப்பு ரீதியான வன்முறைகள் அதிகரித்தன. இதையடுத்து, நீதிமன்றம் தலையிட்டு வெறுப்புக் குற்றங்களை குறைக்க அறிவுறுத்தியது.

அமெரிக்காவின் சித்தாந்தம் என்னவென்றால், அனைவருக்கும் உறுதியளிப்பது, ஒவ்வொருவரையும் மாண்புடனும், சமமாகவும் நடத்துவது, அனைவரையும் உள்ளடக்கியதாக திட்டங்கள் இருத்தல், பன்முகதன்மை கொண்ட ஜனநாயகம் இதுதான் அமெரிக்கா. இங்கு வெறுப்புக்கும், வெள்ளைஇன மேட்டிமைத்தனத்துக்கும் இடமில்லை. 

கொரோனா வைரஸ் காலத்தில் அமெரிக்காவில் இனவெறி அதிகரித்திருந்தது. மக்கள் தெருக்களில் நடக்கவே அஞ்சினார்கள். வரலாற்று சிறப்புமிக்க கறுப்பின கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.  

அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்த முடியும்.  அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு எதிராக அதிக வெடிகுண்டு மிரட்டல்களைப் பற்றித்தாந்  கவலைப்பட வேண்டிய நிலை இருக்கிறது. பெரும்பாலும் பூர்வீக அமெரிக்கர்கள்கூட துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல முயற்சி! சொந்த பாதுகாப்பாளர்கள் தாக்குதல்?

வெள்ளை இன மேட்டிமைத்தனம், வன்முறையால் தூண்டப்படும் அனைத்து வகையான வெறுப்புகளுக்கும் அமெரிக்காவில் இடமில்லை என்பதை நீங்கள் தெளிவாகவும் வலுவாகவும் வெளியே கூற வேண்டும். நாம் மவுனமாக இருப்பது இனவாதத்தை ஒழிக்க தடையாகும். ஆதலால், நாம் மவுனமாக இருக்கக் கூடாது
இவ்வாறு ஜோ பிடன் தெரிவித்தார்
 

click me!