மலேசியா அரசியலில் 29 ஆண்டுகள் அமைச்சராக கோலோச்சிய தமிழர் டத்தோ சாமிவேல் மறைந்தார்.. மோடி, ஸ்டாலின் இரங்கல்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 15, 2022, 8:42 PM IST

மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில் 29  ஆண்டுகள் அமைச்சராக இருந்த  டத்தோ சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86, அவரின் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில் 29  ஆண்டுகள் அமைச்சராக இருந்த  டத்தோ சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86, அவரின் மறைவையொட்டி பல்வேறு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலேசியாவில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களில் மிக  முக்கியமானவராக இருந்தவர் டத்தோ சாமிவேலு, மலேசிய இந்தியர்களின், தமிழர்களின் முகமாக இருந்தவர் அவர். 1936 ஆம் ஆண்டு மார்ச் -8 ஆம் தேதி பிறந்த இவர் 1959 ஆம் ஆண்டு மலேசிய அரசியலில் கால்பதித்தார். அப்போது முதல் பல்வேறு தேர்தல்களில் நின்று வெற்றி வாகை சூடி வந்தார்.

Tap to resize

Latest Videos

பின்னர் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராகவும் அவர் அப்போது பதவி வகித்தார். அந்நாட்டில் கடந்த 29 ஆண்டுகளாக அவர் கேபினட் அமைச்சராகவும் இருந்து வந்தவர் ஆவார். மலேசியாவின் சுங்கை சிபுட் தொகுதி எம்பி ஆகவும், 1974 ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை  பணியாற்றினார். உடல் நலம் காரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முழுமையாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார் டத்தோ சாமிவேலு, தனது இறுதி காலத்தில் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்களால் அதிகம் பேசப்பட்டவர் ஆவர்.

வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தூக்கத்திலேயே அவரு உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது. அதற்கான அறிவிப்பை மலேசிய இந்திய காங்கிரசின் மூத்த தலைவர் தத்துக் செரி சுப்ரமணியன் வெளியிட்டார். மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு, உயிரிழந்தார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், அவர் மலேசிய நாட்டிற்கும், இந்திய சமூகத்திற்கும் ஆற்றிய சேவை அளப்பரியது என ஒரு பதிவிட்டு இருந்தார்.

 

Saddened by the passing away of Tun Dr. S. Samy Vellu, Former Cabinet Minister of Malaysia and the first Pravasi Bharatiya Samman Awardee from Malaysia. Heartfelt condolences to his family. Om Shanti. pic.twitter.com/RkFRSCOTtW

— Narendra Modi (@narendramodi)

டாக்டர் சாமிவேலுவின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். தமிழகத்துடன் நீண்ட தொடர் வைத்திருந்தவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் நெருங்கி பழகி வந்தவர் டத்தோ சாமுவேல் ஆவார். சாமுவேலின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாமுவேலின் மரணச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, மலேசியாவில் பிரவேசி பாரதி விருதை வென்ற முதல் நபர் இவர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் டத்தோ சாமுவேல் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் டாக்டர் டத்தோ சாமிவேலுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. 1979 முதல் 31 ஆண்டுகள்   மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர், 29 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக இருந்தவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், டத்தோ சாமுவேல் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக நீண்ட  காலம் பணியாற்றியவர் 29 ஆண்டுகள் மலேசிய அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவர்களில் ஒருவர், அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மலேசியா வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 
 

click me!