indian americans: அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்தியர்களுக்கு முக்கியப் பதவி

By Pothy Raj  |  First Published Sep 15, 2022, 9:09 AM IST

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு முக்கியமான பதவி வழங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். 


அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளி அமெரிக்கர்களுக்கு முக்கியமான பதவி வழங்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். 

அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதம் இருக்கும் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள சிறப்பான பிரதிநிதித்துவமாகும். 

Tap to resize

Latest Videos

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!!

இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தையொட்டி அமெரி்க்காவில் நடந்த நிகழ்ச்சி வாஷிங்டனில் நேற்று நடந்தது. இதில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு கவுன்சிலின், உலக சுகாதார பாதுகாப்பு மற்றும் பயோபாதுகாப்பு மூத்த இயக்குநர் ராஜ் பஞ்சாபி பங்கேற்றார். அவர் பேசுகையில்   “ அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில் 130 இந்தியவம்சாவளி அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இந்தியர்களுக்கு பெருமைதரக்கூடிய செய்தி. 

பக்கிங்ஹாம் அரண்மனை வந்தடைந்த ராணி எலிசபெத் உடல்; செல்போன் டார்ச் அடித்து அஞ்சலி செலுத்திய மக்கள் வெள்ளம்!!

இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அமெரிக்காவில் உள்ள 75 இந்திய அமெரிக்க அமைப்புகள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி வரலாற்று மைல்கல். இதில் அமெரிக்க இந்திய உறவு கவுன்சில், சேவே இன்டர்நேஷனல், ஏகல் வித்யாலயா அறக்கட்டளை, இந்து சுயம்சேவக் சங், கோபியோ சிலிகான் வேலி, அமெரிக்க இந்தியா நட்புறவு கவுன்சில், சனாதன் சன்ஸ்கிருக்கான சர்தார் படேல் நிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தது

இந்தியா அமெரிக்க நட்புறவில், பிடன் நிர்வாகத்தில் நானும் பங்கேற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. பிடன் நிர்வாகத்தில் பன்முகத்தன்மை இருக்கிறது, அவர்கள் பல்வேறுதரப்பாக இருந்தாலும் அமெரிக்காவை முன்னிலைப்படுத்துகிறார்கள். 

அதிபர் பிடனின் இந்தியாவின் சுதந்திரத்தின வாழ்த்துச் செய்தியில் “ உலகில் உள்ள மக்கள், அமெரிக்காவில் உள்ள 40 லட்சம் இந்திய அமெரி்க்கர்கள் இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள். மகாத்மா காந்தி வழிகாட்டிய அஹிம்சை, உண்மை வழியில் இந்தியர்களுடன் சேர்ந்து அமெரிக்காவும் சுதந்திரதினத்தைக் கொண்டாடும்” எனத் தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி!!

இந்தியாவும்,அமெரிக்காவும் பிரிக்கமுடியாத கூட்டாளிகள். சட்டத்தின் ஆட்சி, மனிதர்களுக்கு சுதந்திரம், மரியாதையை நிலைநாட்டுவதில் இந்தியா, அமெரிக்க ஒத்திசைந்து செயல்படுகின்றன” எனத் தெரிவித்தார்

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டாக்டர் அமி பேரா, ராவ் கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் தவிர்த்து 4 மேயர்கள் உள்ளனர். 

இது தவிர கூகுளை வழிநடத்தும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட்டை நிர்வகிக்கும் நாதெள்ள சத்யா, அமெரிக்க நிறுவனங்களை நிர்வகிக்கும் 24 இந்தியர்கள், அடோப் நிர்வாகி சாந்தனு நாராயன், ஜெனரல் ஆட்டோமிக்ஸ் விவேக் லால், டிலோட்டி புனித் ரெஞ்சன், பெடெக்ஸ் ராஜா சுப்பிரிமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
 

click me!