மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 11 அன்று இந்தியா அரசு, துக்க தினமாக அனுசரித்தது.
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரை அங்கிருந்தபடியே டாக்டர்களும் கவனித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !
இதையடுத்து 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார். எனினும் கடந்த 9-ஆம் தேதி அவர் உயிர் பிரிந்தது. அவர் உயிரிழந்ததை இங்கிலாந்து அரண்மனையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்தின் நீண்டகால ராணியாக பதவி வகித்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவை அறிந்து அந்நாட்டு மக்கள் பேரதிர்சி அடைந்தனர்.
ராணி எலிசபெத்தின் மறைவுக்கு முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 12ஆம் தேதி, இரங்கலைத் தெரிவிக்க டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு
மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 11 அன்று இந்தியா அரசு, துக்க தினமாக அனுசரித்தது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் வெளிநாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் என 500- க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 17ந்தேதி முதல் 3 நாள் பயணமாக லண்டன் செல்லும் திரௌபதி முர்மு 19 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலியை பதிவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..air india : ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பிய புகை.. 141 பயணிகளின் கதி என்ன ? பதறவைக்கும் வைரல் வீடியோ !