கொழும்பு விமான நிலைய.த்தின் விஐபி கேட் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். துபாய் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு வந்தபோது மக்கள் இவரை அடையாளம் கண்டு குடியுரிமை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இவரும் முன்னாள் அமைச்சராவார்.
கொழும்பு விமான நிலைய.த்தின் விஐபி கேட் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். துபாய் நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு வந்தபோது மக்கள் இவரை அடையாளம் கண்டு குடியுரிமை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இவரும் முன்னாள் அமைச்சராவார்.
இலங்கையின் மிகப் பெரிய பொருளாதார சிக்கலுக்குப் பின்னர் அங்கு அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். போராட்டக்காரர்களின் அதிரடியான நடவடிக்கையால் இவர்கள் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை விட்டு தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இலங்கையின் புதிய இடைக்கால பிரதமராகிறார் சஜித் பிரேமதாச! - 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு?
பிரதமர் ரணில் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டுக்குள் நுழைந்து சுற்றுலாதலமாக மாற்றி விட்டனர். தற்போது இலங்கை மக்கள் அதிபரின் வீட்டை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் வழியாக துபாய் தப்பிச் செல்வதற்கு முயற்சித்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரை அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். அவரை தப்புவதற்கு விடக் கூடாது என்று குடியுரிமை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பசில் செல்வதற்கு குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
சுற்றுலா தலமாக மாறிய அதிபர் மாளிகை! விளையாடி மகிழும் போராட்டக்காரர்கள்!
முன்பு பசில் ராஜபக்சே இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது. இதை இந்தியா மறுத்து இருந்தது. இவரைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது. இதையும் இந்தியா மறுத்துள்ளது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சேவின் மூத்த சகோதார்தான் மகிந்த ராஜபக்சே. ஏற்கனவே பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்து விட்டார். இவர் இரண்டு முறை இலங்கையின் அதிபராக இருந்தவர். இனி இவர் அதிபர் ஆக முடியாது என்ற நிலையில்தான் இவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார். மகிந்த ராஜபக்சேவின் கீழ் மோசமான நிர்வாகம் இருந்த காரணத்தினால்தான் இலங்கை மிகப்பெரிய வீழச்சியை சந்தித்துள்ளது என்று மக்கள் கருதி வருகின்றனர். இவரது ஆட்சியில்தான் சீனாவிடம் அதிகளவில் கடன் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.