எங்க நாட்டுக்கு வாங்க! அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்.. பின்லாந்து அரசு அறிவித்த அதிரடி சலுகைகள் !

By Raghupati RFirst Published Dec 21, 2022, 5:43 PM IST
Highlights

பின்லாந்து நாட்டில் தொழிலாளர் நெருக்கடி அதிகரித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும், சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளை மூன்று மடங்காகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது என்று ஃபின்லாந்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் துயுலா ஹாடைனென் இந்தியாவிற்கு வருகை தந்தபோது கூறியிருந்தார்.

அதன்படி, இந்தியர்களுக்கான வேலை இடமாக பின்லாந்து மாறும் என்பதற்கு தொடக்கமாக, அமைச்சர் துயுலா ஹாடைனென் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  அப்போது பேசிய அவர், பின்லாந்து தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறைகளில் தொழிலாளர்களை ஈர்க்கும். இந்தியாவிலிருந்து செவிலியர்கள் போன்ற பலருக்கும் குடியுரிமை தொடர்ந்து வழங்கப்படும்.

இதையும் படிங்க..லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?

எங்களுக்கு அதிக பணியாளர்கள் தேவை, திறமை தேவை, தொழில் வல்லுநர்கள், திறமையானவர்கள் தேவை. அவர்கள் பின்லாந்திற்குள் நுழைய விரும்பினால் அதனை நாங்கள் வரவேற்போம். மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அதிகளவு எங்களது நாட்டிற்கு வர வேண்டும் என்பதே விருப்பம்.

இந்த ஆண்டு ஜெர்மனியுடனும், கடந்த ஆண்டு இங்கிலாந்துடனும் (U.K.) இந்தியா சமீபத்தில் இதே போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா இழப்புகளில் இருந்து மீண்டு  வருவதால், ஐரோப்பா முழுவதும் பெரும் தொழிலாளர் நெருக்கடி காணப்படுகிறது. இந்தியாவில் உள்ள திறமையானவர்கள் வர வேண்டும் என்பதே அந்தந்த நாடுகளின் விருப்பமாக உள்ளது.

குறிப்பாக பின்லாந்து, சுமார் 5.5 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு, சுமார் 2.5 மில்லியன் பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். பின்லாந்தின் வேலைவாய்ப்பு அமைச்சகம் மார்ச் மாதம் நடத்திய ஒரு கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறை ஆய்வுகள் பின்லாந்தில் 70% க்கும் அதிகமான நிறுவனங்கள் திறமையான தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. இதனால் பின்லாந்து அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

குடும்பத்துடன் சேர்ந்து வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்களுக்கு என்று கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் உள்ளூர் மொழியை அவர்களுக்கு கற்பிப்பதற்கான செலவில் பாதியை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

click me!