ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு பொறுப்பேற்றபின், பெண்களுக்கு எதிரான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும்நிலையில், இப்போது பல்கலைக்கழகங்களில் பயில பெண்களுக்கு தடைவிதித்து தலிபான் அரசு உத்தரவி்ட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசு பொறுப்பேற்றபின், பெண்களுக்கு எதிரான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும்நிலையில், இப்போது பல்கலைக்கழகங்களில் பயில பெண்களுக்கு தடைவிதித்து தலிபான் அரசு உத்தரவி்ட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை துரத்திவிட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். கடந்த முறை போன்று இல்லாது, இந்த முறை பெண்களுக்கு அதிகமான உரிமைகளை வழங்குவோம் எனக் கூறிக்கொண்டு தலிபான்கள் ஆட்சிஅரியணையில் அமர்ந்தனர்.
தென் சீனக் கடலில் திமிரும் சீனா; தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யும் பீஜிங்; பின்னணி என்ன?
ஆனால், ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஷரியத் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி பெண்களை அடக்கி, ஒடுக்கும் பணியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் தலிபான் உயர்கல்வித்துறை அமைச்சகம் பெண்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு தடைவிதித்துள்ளது.
சிறுமிகள் நடுநிலைப் பள்ளிகளிலும்,உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது, பெண்கள் வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு பெண்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, ஆண் துணையின்றி பெண் வெளியே செல்லவும் கூடாது என்று தலிபான் அரசு உத்தரவிட்டது. பெண்கள் தலைமுதல் கால் வரை மறைக்கும் வகையில் புர்கா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும் எனவும் தடைவிதித்தனர்.
இது தவிர இசை மற்றும் பெண்கள் பாடுவது, வானொலியில் பெண்கள் பேசுவது, பாடுவது ஆகியவற்றுக்கும் தலிபான் அரசு தடை விதித்தது. தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்களில் பணியாற்றிய பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
கொரோனாவால் எலுமிச்சை பழத்தை தேடி அலையும் சீன மக்கள்! விலை பன்மடங்கு உயர்வு! என்ன காரணம்?
தலிபான் ஆட்சிக்கு வந்தபின், காபூல் நகரில் தேசிய இசை நிறுவனம் செயல்பட்டுவந்ததை இழுத்து மூடினர். அங்கிருந்த இசைக்கருவிகளையும் தலிபான்கள் அடித்து துவம்சம் செய்தனர்.
பெண்கள் பொதுவெளிக்கு வந்து பட்டம் விடவும் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் பொதுவெளியில் வந்து பட்டம் விடும்போது இளைஞர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும் என்பதால், பட்டம் விடும் போட்டியிலும் பெண்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.
சீனாவில் கொரோனா வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்! அதிர்ச்சித் தகவல்
ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் அணி, ஹாக்கி அணி, கால்பந்து அணி செயல்பட்டு வந்தது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது
இதில் கொடுமையாக ஆண்கள் முகச்சவரம் செய்யவும், முடி வெட்டிக்கொள்ளவும் தலிபான்கள் தடைவிதித்தனர்.