மருத்துவப் படிப்பை மேற்கொள்ள சீனா சென்று உயிரிழந்த தமிழக மாணவருக்கு அந்நாட்டிலேயே இறுதிச் சடங்கு நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்ற 22 வயது மாணவர் சீனாவில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருந்மார். கொரோனா தொற்று காரணமாக இந்தியா திரும்பிய அவர் ஆன்லைனில் படிப்பைத் தொடர்ந்து வந்தார்.
இறுதி ஆண்டு பயிற்சிப் பணியை முடிக்க கடந்த டிசம்பர் 11ஆம் தேதி சீனா சென்றுள்ளார். சீனாவுக்குள் நுழைந்ததும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டு அரசு அவரைத் தனிமைப்படுத்தி வைத்தது.
தனிமைப்படுத்தப்பட்ட ஷேக் அப்துலா திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த அவரது பெற்றோர் அவரை இந்தியாவுக்கு அழைத்துவர உதவி கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தனர். மருத்துவப் பயிற்சியை இந்தியாவிலேயே முடிக்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அமெரிக்காவில் மூன்று இந்தியர்களுக்கு நீதிபதி பதவி
இதனிடையே சீனாவில் அவர் படித்த பல்கலைக்கழக நிர்வாகம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தது. இந்நிலையில் தங்கள் மகனின் இறுதிச் சடங்குகளை சீனாவிலேயே நடத்த ஷேக் அப்துல்லாவின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர் என் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கூறியுள்ளார்.
மாணவர் அப்துல்லாவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் மருத்துவமனைகளில் குவியும் கொரோனா தொற்று நோயாளிகள்.. அதிர்ச்சி புகைப்படங்கள்