Tokyo Japan: டோக்கியோவை விட்டு வெளியேறும் பெற்றோருக்கு ரூ.6.20 லட்சம் பரிசு: ஜப்பான் அரசு வழங்க காரணம் என்ன?

By Pothy Raj  |  First Published Jan 4, 2023, 12:51 PM IST

டோக்கியோ நகரைவிட்டு வெளியேறும் பெற்றோருக்கு இருக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் 10 லட்சம் யென்(அமெரிக்கடாலரில் 7,600, இந்திய மதிப்பில் ரூ.6.20 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.


டோக்கியோ நகரைவிட்டு வெளியேறும் பெற்றோருக்கு இருக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் 10 லட்சம் யென்(அமெரிக்கடாலரில் 7,600, இந்திய மதிப்பில் ரூ.6.20 லட்சம்) வழங்கப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் கொரோனா தொற்றுக்குப்பின் கிராமங்களில் குழந்தைப் பிறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது, அங்கு பொருளாதாரத்தை இயக்குவதற்கு போதுமான மக்கள் தொகை இல்லாததால், அங்கு மக்களை குடியேற ஊக்கப்படுத்துகிறது ஜப்பான் அரசு

Tap to resize

Latest Videos

உலகிலேயே மிகப்பெரிய நகரங்களில் டோக்கியோ முக்கியமானது. இங்கு 3.80 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளரை தாக்கிய புலி… சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

டோக்கியோ நகரை விட்டு குழந்தையுன் வெளியேறி புறநகரில்  அல்லது கிராமங்களில் குடியேறும்பெற்றோருக்கு இருக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் 3 லட்சம் யென் வழங்கப்படும் என்ற திட்டத்தை ஜப்பான் அரசு வைத்திருந்தது. ஆனால், அதற்கு போதுமான வரவேற்பு இல்லாததையடுத்து, 10 லட்சம் யென்னாக உயர்த்தியுள்ளது.

இதன்படி புறநகரில் அல்லது குடியேறும் மக்கள் இந்தப் பணத்தின் மூலம் புதிதாக தொழில்செய்துகொள்ளலாம், இந்தப் பணம் கடனாக இல்லை, இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

2021ம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் டோக்கியோ நகரில் இருந்து 2,400 பேர் மட்டுமே இடம் பெயர்ந்து கிராமத்துக்குள் சென்றிருந்தனர் இது டோக்கியோ மக்கள் தொகையில் 0.006 சதவீதம்தான்.

ஏன் ஜப்பான் நிதி உதவி வழங்குகிறது

ஜப்பானின் மக்கள் தொகையில் திடீரென கொரோனாவுக்குப்பின் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மக்களுக்கு குழந்தைப் பிறப்பு விகிதம் மளமளவெனச் சரிந்து வருகிறது, இதைக் கவனிக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, 65வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்துவிடும். வேலைபார்க்கும், உழைக்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படும். இதைச் சரிக்கட்டவே பல்வேறு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு எடுத்துவருகிறது. 

கடந்த 2019ம் ஆண்டு இந்தத் திட்டத்தை கொண்டு வந்தபோது 71பேர்தான் டோக்கியோ நகரைவிட்டு வெளியேறினர். 2020ம் ஆண்டில் 290 பேரும், 2021ம்ஆண்டில் 2400 பேரும் வெளியேறி கிராமத்துக்கு சென்றனர். இந்தத்திட்டத்தை விரைவுப்படுத்தவும், 2027ம் ஆண்டுக்குள் 10ஆயிரம் பேரை வெளியேற்றவும் ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?

குறையும் குழந்தை பிறப்பு

ஜப்பான் தேசிய மக்கள்தொகை மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் 20230ம் ஆண்டில் ஜப்பானில் குழந்தைப் பிறப்பு 8 லட்சத்துக்கும் கீழ் செல்லும் என்று தெரிவித்தது. ஆனால், 2022ம் ஆண்டில் 9 மாதத்துக்குள்ளே இதுபோன்று குழந்தைப் பிறப்பு குறைந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட வேகமாக குழந்தைப் பிறப்பு குறைந்து வருகிறது

திருமணமான இளம் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள், அவ்வாறு குழந்தை பெற்றாலும் ஒரு குழந்தையோடு நிறுத்திவிடுகிறார்கள். இளம் தம்பதிகள் திருமணம் நடந்தபின் டோக்கியோ, ஓசாகா போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். 

பொருளாதார முடக்கம்

இதனால் சிறிய நகரங்கள், கிராமங்கள், புறநகர்களில் கடைகளில் பொருட்களை வாங்கவும், விற்கவும் ஆள்இல்லாமல் வியாபாரம் செய்யமுடியாமல் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 2023ம் ஆண்டில் ஜப்பானில் காலியாகும் வீடுகள் எண்ணகி்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என்றும், சொத்து மதிப்பு விண்ணை முட்டும் வகையில் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து டோக்கியோ நகரில் இருந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோரை புறநகருக்கும், கிராமங்களுக்கும் நகர்த்தும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு குழந்தையுடன் வெளியேறும் பெற்றோருக்கு குழந்தை ஒவ்வொன்றுக்கும் 10 லட்சம்யென் பரிசாகவும் வழங்குகிறது.

ஆனால் அவ்வாறு வெளியேறும் பெற்றோர் டோக்கியோ நகரில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குடியிருந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான செலவை ஜப்பான் அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் பிரித்துக்கொண்டுள்ளன.

கிராமம் அல்லது புறநகருக்கு செல்லும் பெற்றோர் அரசு நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்தங்கியிருக்கவேண்டும். அங்கு ஏதாவது தொழில் அல்லது பணி அல்லது வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே மீண்டும் டோக்கியோ வந்தால் பெற்றுக்கொண்ட 10 லட்சம் யென்னை திரும்ப அரசிடம் வழங்கிட வேண்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மது விற்பனை மீதான 30 சதவீத வரி ரத்து!!

கிராமங்களுக்கும், புறநகர்களுக்கு வரும் பெற்றோருக்கு ஏராளமான சலுகைகளை உள்ளாட்சி நிர்வாகமும் வழங்கியுள்ளன. குழந்தைகள் காப்பகத்துக்கு கட்டணம் இல்லை, வரி்ச்சலுகை, தொழில்தொடங்க சலுகை என அறிவித்துள்ளன. ஆனால், ஜப்பான் மக்கள் டோக்கியை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கிறார்கள்.


 

click me!