சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரை ஒருவரை புலி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது சர்க்கஸ் பயிற்சியாளரை ஒருவரை புலி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தாலியின் லீச்சே மாகாணத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இவான் ஓர்ஃபி (Ivan Orfei) என்ற 31 வயது சர்க்கஸ் பயிற்சியாளரின் காலை ஒரு புலி கவ்வியது. இதை அடுத்து அவர் புலியிடம் இருந்து தப்பிக்க போராடினார். பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு புலியிடம் இருந்து அவர் தப்பினார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் மூன்று இந்தியர்களுக்கு நீதிபதி பதவி
காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அங்கு பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து அங்கிருந்த பார்வையாளர்கள் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து டிவிட்டரில் பகிர்ந்தனர். அந்த வீடியோவில் புலி தாக்குவதும் பார்வையாளர்களின் அலறல் சத்தமும் கேட்பதையும் காணலாம். இந்த வீடியோ கண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?
மேலும் இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சர்க்கஸ் நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இவான் ஓர்ஃபியை மிகவும் திறமையான தொழில்முறை பயிற்சியாளர், நிகழ்ச்சியின் போது புலியால் தாக்கப்பட்டாலும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். இப்பணியைச் செய்யும் இவரைப் போன்றவர்கள் காட்டும் துணிச்சல் பாராட்டுக்குரியது. இவர் மிக விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.