Gotabaya Rajapaksa:அமெரிக்காவில் செட்டிலாகும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே?

By Pothy Raj  |  First Published Jan 3, 2023, 1:23 PM IST

இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டு ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேறுவதற்காக குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து கீழே இறக்கப்பட்டு ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் குடியேறுவதற்காக குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கக் குடியுரிமையை ஏற்கெனவே வைத்திருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் இலங்கையில் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் போட்டியிடக்கூடாது என்ற விதி இருந்ததால் அந்த குடியுரிமையைத் துறந்தார். இப்போது அதே குடியுரிமை கோரி கோத்தபய ராஜபக்ச விண்ணப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Tap to resize

Latest Videos

கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க 2 ஆண்டுகளுக்குத் தடை:ஏன் தெரியுமா?

இலங்கைப் பொருளாதாரத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தினர். ஒரு கட்டத்தில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி இலங்கையிலிருந்து  மாலத்தீவுக்கு கோத்தபய ராஜபக்சே தப்பினார்.

அங்குகிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தவாரே அதிபர் பதவியையும் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அந்நாட்டில் 28 நாட்கள் மட்டுமே இருந்த ராஜபக்சே அங்கிருந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்றார். 

சீனாவில் 9,000 ஐ எட்டியுள்ள ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு… பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது பிற நாடுகள்!!

தாய்லாந்து அரசு 90 நாட்கள் வரை கோத்தபய ராஜபக்சேவுக்கு விசா வழங்கி இருந்தது. ஆனால், பாங்காக் நகரில் ஒருநட்சத்திர ஹோட்டலில் வெளியேவராமல் கடும் பாதுகாப்புடன் கோத்தபய அடைக்கப்பட்டிருந்தார். தான் ஒரு சிறைக்கைதி போன்று வாழ்வதற்கு விரும்பாத கோத்தபய ராஜபக்சே 2 மாதங்களில் கொழும்பு நகருக்கு திரும்பினார்.

இலங்கை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கோத்தபய ராஜபக்சே கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அதன்பின் அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதால் 2005ம் ஆண்டு இலங்கை திரும்பினார். அப்போது அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்சே வைத்திருந்தார்.

ஆனால் 2019ம் ஆண்டு இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், வேறுநாட்டு குடியுரிமை பெற்று இருக்கக்கூடாது என்ற விதி இருந்தது. இதன் அடிப்படையில் அமெரிக்க குடியுரிமையை கோத்தபய ராஜபக்சே துறந்தார். இப்போது மீண்டும் அமெரிக்காவில் குடியேறுவதற்கான பணியில் கோத்தபய ஈடுபட்டுள்ளார்.

Pope Benedict: Pope Benedict XVI: 16ம் போப் ஆண்டவர் போப் பெனடிக்ட் வாடிகனில் காலமானார்

அமெரிக்காவில் கோத்தாபய ராஜபக்சேவின் மனைவி லோமா ராஜபக்ச அவரின் மகன்கள் ஆகியோர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள். மனைவி, மகன்கள் குடியுரிமை பெற்றுவிட்டதால், கணவர், தந்தை அடிப்படையில் குடியுரிமை பெறுவதற்கு ராஜபக்சே தகுதியானவர் என்ற முறையில் க்ரீன்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் கோத்தபய ராஜபக்சேவுக்கு எந்த நாடும் அடைக்கலம் தருவதற்கு முன்வரவில்லை. இப்போது அமெரிக்காவிடம் மீண்டும் குடியுரிமை கோரியுள்ளார். ஆனால், அவரின் குடியுரிமை மனுவை இதுவரை அமெரிக்கா பரிசீலிக்கவில்லை என்று தி சண்டே டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 


அந்த செய்தியில் “ இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது வழக்கறிஞர்கள் மூலம் அமெரிக்க அரசிடம் குடியுரிமை கோரியுள்ளார். இதுவரை அவரின் குடியுரிமை மனுவை அமெரிக்க அரசு பரிசீலிக்கவில்லை. தற்போது துபாயில் விடுமுறையில் ராஜபக்சே குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்” எனத் தெரிவித்துள்ளது
 

click me!