கனடா நாட்டில் ரியல் எஸ்டேட் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதையடுத்து, வெளிநாட்டினர் யாரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சொத்து வாங்கத் தடைவிதித்து கனடா அரசு சட்டம் இயற்றியுள்ளது.
கனடா நாட்டில் ரியல் எஸ்டேட் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதையடுத்து, வெளிநாட்டினர் யாரும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சொத்து வாங்கத் தடைவிதித்து கனடா அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இதை மீறி வெளிநாட்டினர் சொத்துக்கள் எதையும் வாங்கினால், அவர்களுக்கு 10ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என்று சிஎன்என் செய்திகள் தெரிவிக்கின்றன
சீனாவில் 9,000 ஐ எட்டியுள்ள ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு… பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது பிற நாடுகள்!!
கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் கனடாவில் வீடுகள் விலை கடுமையாக உயரத் தொடங்கியது, வீடுகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கிறது என மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதில் வெளிநாட்டிலும் அதிக முதலீடு செய்ததையடுத்து ரியல்எஸ்டேட்விலை கடுமையாக உயர்ந்ததால் இந்த சட்டத்தை கனடா அரசு பிறப்பித்துள்ளது.
இந்தச் சட்டத்தில் கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள், குடிபெயர்ந்தவர்கள் மட்டும் சொத்து வாங்குவதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு நடத்தி புத்தாண்டு கொண்டாட்டம்: குழந்தைகள் உட்பட 22 பேர் காயம்
2020ம் ஆண்டிலிருந்து கனடாவில் வீடுகளின் விலை படிப்படியாக அதிகரி்த்து, 2022ம் ஆண்டில் உச்சத்தை எட்டியது. சராசரியாக ஒரு வீட்டின் விலை என்பது 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று அதிகரித்துவிட்டது. அதாவதுஇந்திய மதிப்பில் ரூ.6.60 கோடியாக அதிகரித்துவிட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக 13 சதவீதம் வரை குறைந்துவிட்டது. இதையடுத்து, வெளிநாட்டினர் முதலீடு செய்வதைத் தடுக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
கனடா வங்கிகள் வட்டிவீதத்தைஉயர்த்தியதால், அதிகமான தொகைக்கு வீடுகளை அடமானம் வைத்தனர். இந்த வட்டிவீதம் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருந்தது
கனடா ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கூறுகயைில் “ கடந்த 2019ம் ஆண்டுஇருந்த விலையைவிட ரியல் எஸ்டேட் விலை கனடாவில் 38 சதவீதம் அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினர் இனிமேல் அதிகமாக சொத்துவாங்குவார்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மது விற்பனை மீதான 30 சதவீத வரி ரத்து!!
எதிர்மறையான பாதிப்பை ரியல் எஸ்டேட் துறைக்கு ஏற்படுத்தலாம். அமெரி்க்காவில் அதிகளவு சொத்துக்களை வாங்குவதில் கனடா மக்கள் முன்னணயில் உள்ளனர். குறிப்பாக ப்ளோரிடா, அரிஜோனாவில் அதிக அளவில் கனடா மக்கள் சொத்துக்களை வாங்கியுள்ளனர். கனடாவில் அமெரிக்கர்களை சொத்துவாங்கவிடாமல் தடுத்து சட்டம் இயற்றினால் கனடா மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ” எனத் தெரிவித்தனர்.