பாகிஸ்தானில் சில விஷமிகள் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டுக் கொண்டாடியதில் குறைந்தது 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரின் கடற்கரையில் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 22 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
சனிக்கிழமை நள்ளிரவில் கராச்சி கடற்கரையிலும் நகரின் வேறு பல பகுதிகளிலும் துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்டதாக அந்நாட்டு தொலைக்காட்சிச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
18 லட்சம் செலவு செய்து ஓநாயாக மாறிய மனிதன்!
அந்நாட்டின் வெவ்வேறு மருத்துவமனைகளில் துப்பாக்கி குண்டினால் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தகவல் அளித்துள்ளன.
துப்பாக்கி பயன்பாட்டுக்குத் தடை விதித்திருக்கும் நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.