ஜப்பானைச் சேர்ந்த ஒரு நபர் தானாக முன்வந்து ஓநாயின் தோற்றத்துக்குத் தன்னை மாற்றிக்கொண்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தன்னை முழுக்க முழுக்க ஒரு ஓநாய் போல மாற்றிக்கொண்டிருக்கிறார். ஓநாயாக மாறவேண்டும் என்ற் ஆசைக்காக பெரும் தொகையைச் செலவு செய்யவும் துணிந்துவிட்டார்.
"சின்ன வயது முதலே எனக்கு விலங்குகள் மீது பிரியம் அதிகம். டிவியில் சிலர் அச்சு அசலாக விலங்குளைப் போல உடை அணிந்து வருவதைப் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் பார்த்து எனக்கும் அப்படியொரு விலங்காகா மாறவேண்டும் என்று தோன்றியது" எனச் சொல்கிறார் அந்த ஆசாமி.
தன்னுடைய விநோத ஆசையை நிறைவேற்றியே தீருவது என்ற முடிவு ஜெப்பெட் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த நிறுவனம் இவரை வரவழைத்து உடல் அளவுகளை எடுத்துள்ளளது. பின்னர் பொருத்தமான ஓநாய் தோற்றத்தைக் கண்டுபிடிக்க பல ஓநாய்களின் படங்களைப் பார்த்துள்ளனர்.
இந்த ஆண்டும் நம் பிரச்சினைகள் ஓயாது! புத்தாண்டு வாழ்த்துடன் அலர்ட் கொடுத்த ரிஷி சுனக்
இப்படி அலசி ஆராய்ந்தபின் தயாரிக்கப்பட்ட உடையை ஐம்பது நாட்கள் கழித்து இவருக்குக்க கொடுத்தது அந்த நிறுவனம். அதை ஆடையை அணிந்த அவர் நினைத்தபடி தான் ஓநாயாக மாறிவிட்டோம் என்று சந்தோஷம் அடைந்திருக்கிறார்.
"கடைசியில் எனக்கு அளிக்கப்பட்ட உடையை அணிந்து கண்ணாடியில் பார்த்தபோது நானே அசந்து போய்விட்டேன். அது என் கனவு நனவான தருணம். ஓநாய் மாதிரி நான்கு கால்களால் நடப்பது எனக்குக் கஷ்டம்தான். ஆனால், நான் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தேனோ அப்படியே ஒரு ஓநாயாக இருந்தேன்" என்று அவர் சொல்கிறார்.
இதற்காக அந்த நபர் 30 லட்சம் யென், அதாவது இந்திய மதிப்பில் 18.5 லட்சம், செலவு செய்திருக்கிறார்!
இந்த நபரின் நூதன ஆசையைப் பூர்த்தி செய்தது போல இன்னொருவரின் ஆசையையும் இந்த ஜெப்பெட் நிறுவனம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது. டோகோ என்பவரை அவர் விரும்பியபடி ஒரு நாயாக மாற்றியிருக்கிறது!
எகிப்தை ஏடாகூடமான இடத்தில் தாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்