2023ஆம் ஆண்டு இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியான ஆண்டாக இருக்கும் என்றும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடாது என்றும் அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டு பிறந்ததை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். தலைவர் அந்தந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இங்கிலாந்துப் பிரதமர் ரிஷி சுனக்கும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், "2022ஆம் ஆண்டும் நெருக்கடியான ஆண்டாகவே இருக்கும். அடுத்த 12 மாதங்களில் இங்கிலாந்தின் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடாது. இந்த ஆண்டும் இங்கிலாந்து மக்களுக்கு நெருக்கடியானதாகவே இருக்கும்." என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து, "இந்த ஓர் ஆண்டைக் கடந்துவிட்டால் இங்கிலாந்தின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்து போல இந்த நெருக்கடியில் இருந்தும் மீளுவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது உள்ள சிக்கல்களில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க அரசு கடினமான, ஆனால் சரியான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அதனால்தான் ஏற்பட்ட எரிபொருளின் விலை உயர்வு போன்ற விளைவுகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
16ம் போப் ஆண்டவர் போப் பெனடிக்ட் வாடிகனில் காலமானார்
மேலும் தனது வாழ்த்துச் செய்தியில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரில் பிரிட்டனன் அரசின் முழு ஆதரவும் உக்ரைனுக்குத்தான் என்றும் ரிஷி சுனக் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு உலக அரங்கில் பிரிட்டனின் சிறப்பைக் பறைசாற்றும் ஆண்டாக அமையும் என்றும் பிரிட்டன் எல்லா சந்தர்ப்பங்களிலும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றபின் அவர் வெளியிட்ட முதல் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி இது. 2022 ஜூலை மாதம் அப்போதைய பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார். ஆனால் அவரும் இரண்டு மாதங்களில் ராஜினாமா செய்துவிட்டார். இறுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.
ஆப்கன் பூகம்பம் முதல் அழகிப் போட்டி வரை... 2022ல் உலகை உலுக்கிய டாப் 20 நிகழ்வுகள்