Pope Benedict: Pope Benedict XVI: 16ம் போப் ஆண்டவர் போப் பெனடிக்ட் வாடிகனில் காலமானார்

By Pothy Raj  |  First Published Dec 31, 2022, 3:46 PM IST

ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் தலைவராக இருந்த  16ம் போப் ஆண்டவர் போப் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் வாடிகனில் இன்று காலமானார். அவருக்கு வயது 95


ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் தலைவராக இருந்த  16ம் போப் ஆண்டவர் போப் பெனடிக்ட் உடல்நலக்குறைவால் வாடிகனில் இன்று காலமானார். அவருக்கு வயது 95

ரோமன் கத்தோலிக்க திருச்சபையை 8ஆண்டுகள் வரை வழிநடத்திய போப் பெனடிக்ட் தனது பதவியைத் துறந்து வாடிகனில் ஓய்வெடுத்து வந்தார். அவரின் உடல்நிலை கடந்தசில நாட்களாக கவலைக்கிடமாக இருப்பதாக தற்போதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் போப் பெனடிக்ட் இன்று காலமானார்.

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடி தாயார் மறைவுக்கு அமெரி்க்க அதிபர் ஜோ பிடன் இரங்கல்

கத்தோலிக்க வரலாற்றில் கடந்த 600 ஆண்டுகளில் போப் பெனடிக்ட் மட்டும்தான் தன்னால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என விலகினார். 

வாடிகன் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் “ மிகுந்த வருத்தத்துடன் தெரிவிப்பது என்னவென்றால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 16வது போப் பெனடிக்ட் இன்று காலை 9.34 மணிக்கு வாடிகனில் உள்ள மேட்டர் எஸிலிசியா மொனாஸ்டரியில் காலமானார். அடுத்த விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்

வாடிகன் நிர்வாகம் கூறுகையில் “ போப் பெனடிக்ட் உடல் ஜனவரி 2ம் தேதி முதல் புனித பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்படும். போப் ஆண்டவர் பெனடிக்ட் இறுதிச்சடங்குவிவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது

மனித வரலாற்றில் முதல்முறை! 20 ஆயிரம் கோடி டாலர் இழப்பை சந்திக்கிறார் எலான் மஸ்க்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வின்சென்ட் நிகோலஸ் கூறுகையில் “ 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இறைநேசர் போப் பெனடிக்ட். கடந்த 2010ம் ஆண்டு அவருடன் நான் பழகிய நாட்கள், மறக்க முடியாதவை” எனத் தெரிவித்துள்ளார்

ஜெர்மனியில் பிறந்த போப் பெனடிக்ட் இயற்பெயர் ஜோஸப் ராட்ஜிங்கர். கடந்த 2005ம் ஆண்டு தனது 78-வது வயதில் 16-வது போப் ஆண்டவராக போப் பெனடிக்டாக தேர்வாகினார். 

போப் ஆண்டவரா இருந்த ஜான்பால்-2 மறைவையடுத்து பெனடிக்ட் தேர்வாகினார். அதிகவயதில் போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும் போப் பெனடிக்ட்தான்
ஆஸ்திரேலியா, ஜெர்மன், அயர்லாந்து, இத்தாலி, போலந்து, அமெரி்க்காவில் கத்தோலிக்க குருமார்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக பெருமளவு புகார்கள் வாடிகனுக்கு வந்தன. ஊடகத்திலும் பல்வேறு செய்திகள் இதுதொடர்பாக வந்ததால், கத்தோலிக்க திருச்சபையின் புனிதம், நிர்வாகம் கேள்விக்குள்ளானது. இதற்கு முன்பலமுறை எச்சரிக்கை அனுப்பியும் அதை வாடிகன் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், போப் பெனடிக்ட் வந்தபின் நிர்வாகத்தில் இந்த கேள்விகளை எதிர்கொண்டார். அதன்பின் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிக்க போப் பெனடிக்ட் உத்தரவிட்டார்


 

click me!