அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது நடந்த கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வயதுச் சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான்.
அமெரிக்காவின் நவேடா மாகாணத்தில் உள்ள செவன் மேஜிக் மவுண்டைன்ஸ்க்கு சுற்றுலாப் பயணிகளும் உள்ளுர் மக்களும் அதிக அளவில் வருவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டதையொட்டி இந்தப் பகுதிக்குச் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த 2 வயதுக் குழந்தை பலியானதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த கும்பல்: பீட்சா டப்பாவை வைத்துப் பிடித்த போலீஸ்!
உயிரிழந்தது கலிபோர்னியாவின் இர்வின் நகரத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தை என்றும் குழந்தையின் பெயர் ஆரவ் முத்யாலா அந்நாட்டு செய்தி நிறுவனமான லாஸ் வேகாஸ் ரிவ்யூ தெரிவிக்கிறது.
இதனிடையே, இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாக நவேடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.