ருமேனியாவில் பெண்களைக் கடத்திச் சென்று ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ஆபாச வீடியோக்களில் நடிக்கவைத்த கும்பலின் தலைவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ருமேனியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரரும் பாக்ஸிங் வீரருமான ட்ரிஸ்டன் டேட் இரண்டு பேரும் அந்நாட்டுப் காவல்துறையால் தேடப்பட்டு வந்தனர். இவர்கள இருவரும் சமூக வலைத்தளங்களில் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவது, பெண்களை ஆபாசமாகவும் கொச்சைப்படுத்தியும் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இதனால் பல சமூக வலைத்தளங்களில் இவர்களது பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ரூ டேட் பெண்களை ஆயுதங்களைக காட்டி மிரட்டி ஆபாசப் படங்கள் எடுத்து ரகசிய இணையதளங்களில் வெளியிடுவதையே தொழிலாகச் செய்துவருவதாகவும் இதற்காக பெரிய கும்பலை உருவாக்கி வைத்திருப்பதாவும் அந்நாட்டு காவல்துறைக்குத் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
undefined
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ருமேனிய காவல்துறை இந்த டேட் சகோதரர்களைக் கைது செய்ய முயன்று வருகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
உக்ரைனை அலறவிடும் ரஷ்யா: சைரன் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்த அப்பாவி மக்கள்!
இந்நிலையில் ருமேனியத் தலைநகரான புகாரெஸ்டில் டேட் சகோதர்கள் இருவரும் அந்நாட்டுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆண்ட்ரூ டேட்டின் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் கைதாகியுள்ளனர்.
ஸ்வீடனைச் சேர்ந்த இளம் காலநிலை செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்கை கிண்டல் செய்து, ட்விட்டரில் ஆண்ட்ரூ டேட் வெளியிட்ட வீடியோதான் ருமேனிய காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு உதவியுள்ளது.
அந்த வீடியோவில் ஆண்ட்ரூ டேட் சிகரெட் புகைத்துக்கொண்டிருக்க, ஒருவர் பீட்சா டப்பாவை அவரிடம் கொடுப்பது போன்ற காட்சி இருந்தது. வீடியோவில் வரும் பீட்சா டப்பாவில் ஜெர்ரீஸ் பீட்சா என்ற புகழ்பெற்ற பீட்சா நிறுனத்தின் பெயர் போலீசார் கண்ணில் பட்டிருக்கிறது. அதை வைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அந்நாட்டு நீதிமன்றம் அவர்களை 30 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
கைது பற்றிய செய்தியை அறிந்ததும் கிரெட்டா துன்பர்க், "பீட்சா டப்பாவை மறுசுழற்சி செய்யாவிட்டால் இப்படித்தான் நடக்கும்" என்று ட்விட்டரில் நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
வட கொரியா ஸ்டைலில் ராக்கெட் விட்டு சொந்த நாட்டு மக்களையே மிரட்டிய தென் கொரியா