பேரிழப்புகளை ஏற்படுத்திய இயற்கை பேரிடர்கள், அரசுகளை அசைத்துப் பார்த்த மக்கள் போராட்டங்கள், புதிய அறிவியல் சாதனைகள் என பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் 2022ஆம் ஆண்டில் அரங்கேறியுள்ளன. இந்தப் பதிவு அவற்றில் முக்கியமான 20 நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தருகிறது.
1. ஆப்கானிஸ்தானில் ஜூன் மாதம் கடந்த 25 ஆண்டுகளில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 6 ஆயிரத்துக்கு மேலானவர்கள் காயமடைந்தனர்.
2. 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்ற பெயரில் ரஷ்யா உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் நடத்தியது. பலமுறை ஏவுகணைகளை வீசி உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல பகுதிகளைத் தாக்கியது. இதில் ஆயிரக்கான அப்பாவி மக்கள் உயிரிழ்ந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலைக் கண்டிக்கும் ஐ.நா. சபை தீர்மானத்துக்கான வாக்கெடுப்பை இந்தியா, சீனா போன்ற நாடுகள் புறக்கணித்தன. முடிவில் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
3. தைவான் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகச் சீனா சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், அமெரிக்கா தைவான் இடையேயான உறவு சீனாவின் கோபத்தைத் தூண்டியது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி தைவானுக்குச் சென்றதால், தைவானைச் சுற்றி தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட போர் பயிற்சிகள் மேற்கொண்டது.
4. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்ற இம்ரான் கான் அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செபாஷ் ஷெரீப் புதிய பிரதமராக பதிவியேற்றார்.
5. வட கொரியா அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் நோக்கில் தொடர்ந்து ஏவுகணை தாக்குல்கள் நடத்திவந்தது. அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தனது மகளை முதல் முறையாக உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்த மகளை அறிமுகப்படுத்தியதுடன் மகளுடன் பல நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டார்.
பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த கும்பல்: பீட்சா டப்பாவை வைத்துப் பிடித்த போலீஸ்!
6. எழுபது ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். அதிக ஆண்டுகள் பிரிட்டன் அரசியாக இருந்த பெருமைக்கு உரியவரான இவரைத் தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் தனது 73வது வயதில் பிரிட்டன் மன்னர் பதவிக்கு வந்தார்.
7. எம். பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவியது. முதலில் லண்டனில் ஒருவரைத் தாக்கிய இந்த நோய் பல நாடுகளுக்கும் பரவி 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத்ப் பாதித்தது. இதனை உலகை அச்சுறுத்தும் நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
8. ஜப்பான் பிரதமரும் அந்நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டார். ஜூலை 8ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த அவரை முன்னாள் கடற்பரை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அபே மறைவுக்குப் பின் புமியோ கிஷிடா அந்நாட்டுப் பிரதமராக உள்ளார்.
9. பெரு நாட்டில் அதிபர் பெட்ரோ கேஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டார். அடுத்த அதிபராக தீனா பொலுவார்த்தே பதவியேற்றார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். பிரேசில் தேர்தலில் ஜெயிர் போல்சோனாரோவை தோற்கடித்து லூயிஸ் இனாசியோ புதிய அதிபரானார். மலேசியா தேர்தலில் அன்வர் இப்ராஹிம் கூட்டணி ஆட்சி அமைத்து பிரதமராகப் பதவியேற்றார்.
10. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்து, அத்தியாவச உணவுப் பொருட்களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். அதிபர் மாளிகையை மாளிகையில் புகுந்து அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்தார்.
வட கொரியா ஸ்டைலில் ராக்கெட் விட்டு சொந்த நாட்டு மக்களையே மிரட்டிய தென் கொரியா
11. 2012 முதல் சீன அதிபராக இருக்கும் ஜீ ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு அதிபராகத்த தேர்வானார். அக்டோபரில் நடைபெற்ற அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அவர் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்வானார். இதன் மூலம் தன் வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதையும் உறுதிசெய்திருக்கிறார்.
12. நாசாவின் அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புகைப்படங்கள் வெண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. 2021ஆம் ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்ட இந்தத் தொலைநோக்கி 15 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. இந்தப் படங்கள் சூரியன் மற்றும் பூமி உருவான விதத்தை அறிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
13. உலக மக்கள் தொகை 2022 நவம்பர் மாதத்தில் 800 கோடியை எட்டியது. இது மனிதகுல வரலாற்றில் ஒரு மைல்கல் என்றது ஐ.நா. சபை. 2030க்குள் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.
14. ஜூலை மாதம் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன். அவருக்குப் பின் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியேற்றார். ஆனால் அவரும் இரண்டு மாதங்களில் ராஜினாமா செய்தார். இறுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார்.
15. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 1,700 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
16. சோவியத் யூனியனின் கடைசி அதிபரான மிக்கேல் கோர்பசேவ் 91 வயதில் காலமானார். சோவியத் யூனியனிலிருந்து பல நாடுகள் விடுதலை பெற்று தனிநாடாக உருவாக்கக் காரணமாக இருந்த இவர், 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
17. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காகக் கைது செயப்பட்ட 22 வயது பெண் போலீஸ் காவலில் உயிர் இழந்தார். இதனால், அந்நாட்டில் நிலவும் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெண்கள் திரண்டு பெரும் போராட்டம் நடத்தினர்.
18. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது மருத்துவ உலகில் ஒரு சாதனையாகப் பாராட்டப்பட்டது. 57 வயதான பென்னட் அறுவை சிகிச்சைக்குப் பின்பும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து மரணம் அடைந்தார்.
19. நவம்பர் மாதத்தில் எகிப்து நாட்டில் ஐ.நா. பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. பின்தங்கிய நாடுகளும் வளரும் நாடுகளும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில், வளர்ந்த நாடுகள் நிதி உதவி வழங்க வேண்டும் என்ற தீர்மானம் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
20. போர்ட்டோரிகோ நாட்டில் நடைபெற்ற 70வது உலக அழகி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் போலந்து நாட்டை சேர்ந்த 23 வயதான கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகி படத்தைத் தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீசைனிக்குக் கிடைத்தது.