புதிய சர்ச்சையில் எலான் மஸ்க்! பயிற்சிப் பணிக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு அழைத்தாரா?

By SG Balan  |  First Published Jun 12, 2024, 3:45 PM IST

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை எலான் மஸ்க் அடிக்கடி இரவில் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை கூறுகிறது.


ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், பயிற்சிப் பணிக்கு வந்த பெண் உள்பட இரண்டு ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், மற்றொரு பணியாளரை தனது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் எலான் மஸ்க் இதுபோல பல குற்றச்சாட்டுகளைச் சந்தித்துள்ளார்.

Latest Videos

undefined

எலான் மஸ்க் தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை சில சமயங்களில் கொகைன், கெட்டமைன் போன்ற போதைமருந்துகளை பயன்படுத்த வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஜோக்குகளைக் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியமே கொடுக்கிறார் என்றும் புகார் செய்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

யார் இந்த அசோக் எல்லுசாமி? எலான் மஸ்க் எக்கச்செக்கமா பாராட்ட காரணம் என்ன?

இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்லாவில் உள்ள பெண் ஊழியர்களை எலான் மஸ்க் அசாதாரண அளவுக்கு பின்தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க் 2016ஆம் ஆண்டு தன்னை உடலுறவுக்கு அழைத்து, அதற்கு ஈடாக ஒரு குதிரை வாங்கித் தருவதாகக் கூறினார் என்று ஸ்பேஸ்எக்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2013இல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்த மற்றொரு பெண், எலான் மஸ்க் பல சந்தர்ப்பங்களில் தனது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உலகம் குறைவான மக்கள்தொகையால் நெருக்கடியில் இருக்கிறது என்றும் அதிக புத்திக்கூர்மை உள்ளவர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணை எலான் மஸ்க் அடிக்கடி இரவில் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை கூறுகிறது.

எலான் மஸ்க்கின் வழக்கறிஞர் க்வின் ஷாட்வெல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். புகார்களில் கூறப்படும் தகவல்கள் எதுவும் உண்மையானவை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அவை பொய்கள் மூலம் தவறான கதையை சித்தரிக்கின்றன என்று கூறியுள்ள ஷாட்வெல், எலான் மஸ்க் எனக்குத் தெரிந்த சிறந்த மனிதர்களில் ஒருவர்" என்றும் தெரிவித்துள்ளார்.

15,000 கொசுக்களுக்கு ரத்த தானம்! விபரீத ஆராய்ச்சியில் இறங்கியுள்ள 'கொசு மனிதன்'!

click me!