பாகிஸ்தானின் குர்ரம்; பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு - 38 பேர் கொல்லப்பட்ட கொடூரம்!

Pakistan : இந்த துப்பாக்கிசூட்டில் 6 பெண்கள் உள்பட பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.

pakistan attack on passengers vehicle 38 killed by unkown gunmen ans

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் பகுதியில் இன்று வியாழக்கிழமை, பயணிகள் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைமைச் செயலாளர் நதீம் அஸ்லம் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் குர்ரம் பழங்குடியினர் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "இது ஒரு மிக பெரிய சோக நிகழ்ச்சி என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

Latest Videos

கலர் முதல் இன்டர்நெட் வரை எக்கச்செக்க கெடுபிடி... இப்படியும் ஒரு நாடு இருக்குதா!

"பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து பரசினாருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பயணிகள் வாகனங்களும், மற்றொன்று பரசினாரிலிருந்து பெஷாவருக்கும் சென்ற வாகனமும், இன்று ​​ஆயுதம் ஏந்திய நபர்களால் கொடூரமான துப்பாக்கிசூட்டிற்கு உள்ளாகியுள்ளது" என்று பரசினாரில் வசிக்கும் ஜியாரத் ஹுசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் அளித்த தகவளின்பெயரில் 40 பேர் கொண்ட ஒரு வாகனம் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டதாக கூறியுள்ளார். "பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பெண்கள், பல குழந்தைகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடங்குவதாக ஆரம்ப அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன" என்று மூத்த நிர்வாக அதிகாரி ஜாவேத் உல்லா மெஹ்சுத் கூறினார். "இந்த இரு சம்பவங்களிலும் ஏறத்தாழ 10 தாக்குதல் காரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், சாலையின் இருபுறமும் நின்றுகொண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என்று மெஹ்சூட் மேற்கோள் காட்டினார்.

"பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளூர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர், நாங்கள் தற்போது (தாக்குதல் நடத்தியவர்களை) அப்பகுதியில் தேடி வருகிறோம்" என்று அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு எந்த குழுவும் இப்பொது வரை பொறுப்பேற்கவில்லை. அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரேசில் பயணம் சக்சஸ்! அடுத்து கயானா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image