New Covid Model in China: சீனாவில் கொரோனா வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்! அதிர்ச்சித் தகவல்

By Pothy RajFirst Published Dec 20, 2022, 4:53 PM IST
Highlights

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு  வந்துள்ள நிலையில், அங்கு பரவும் கொரோனா வைரஸின் பிஎப் 7 வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு  வந்துள்ள நிலையில், அங்கு பரவும் கொரோனா வைரஸின் பிஎப் 7 வைரஸால் 20 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் தடுப்பூசியை முறையாகச் செலுத்திக்கொள்ளாதது, இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது, அதிகமானோர் பாதிக்கப்பட்டு சுகாதாரத்துறைக்கு அழுத்தம் ஏற்படுவது போன்ற காரணங்களால் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்தபோதிலும் சீனாவில் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, அந்த கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்தியது. 

சீனாவில் கோரதாண்டவமாடும் கொரோனா!பெய்ஜிங்கில் பிணக்குவியல்! நிரம்பும் மருத்துவமனைகள்

இந்த தளர்வுகளுக்குப்பின், சீனாவில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரிக்கத் தொடங்கியது, அதோடு கொரோனா உயிரிழப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் நேற்று மட்டும் கொரோனாவில் 5,242 பேர் உயிரிழந்துள்ளனர். 

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் பிணக்குவியல்களாக கிடக்கின்றன. அங்குள்ள ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி மனிதஉடல்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் தென்மேற்கு குவாங்ஸி மண்டலத்தின் நோய்தடுப்பு மையத்தின் தலைவர் ஹோ ஜியாடாங் கடந்த மாதம் கொரோனா பரவல் குறித்து ஆய்வு நடத்தி, அதை ஷாங்காய் ஜர்னல் ஆப் ப்ரீவென்டிவ் மெடிசின் இதழில்வெளியிட்டிருந்தார். அதில் “ சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அடுத்த சில மாதங்களில் 20 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும். அதேபோல ஹாங்காங்கிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் உயிரிழப்பு அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் 2.3கோடி பேர் கொரோனாவில் இந்த முறை பாதிக்கப்படுவார்கள் 

அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

கடந்த மே மாதம் சீனா மற்றும் அமெரிக்காவில் உள்ள அறிவியல் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில், சீனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், தடுப்பூசியை வேகப்படுத்தாமல், கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால், 15 லட்சம் உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் எனச்எச்சரித்திருந்தது. கொரோனாவில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. 

பிரிட்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி எனும் அறிவியல் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்விலும், சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் பட்சத்தில் அந்த நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று எச்சரித்துள்ளது.

புதிய செயற்கைக்கோள் கண்காணிப்புக்காக புறப்பட்ட சீன உளவுக் கப்பல் யுவான் வாங்-3

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெல்த் மெட்ரிக்ஸ் அன்ட் இவாலுவேஷன் நிறுவனம் நடத்திய ஆய்வில், 2023ம் ஆண்டில் சீனாவில் கொரோனாவில் 10 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் ஏப்ரலில் இது உச்சமடைந்து, 3.22 லட்சமாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது

ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் 2022, டிசம்பர் மாதத்தில் அனைத்து மாகாணங்களும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திவிட்டன. இதனால் 2023ம்ஆண்டு ஜனவரி மாதத்தில் கொரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை லட்சத்துக்கு 684 ஆக உயரும் என்று தெரிவித்துள்ளது.


 

click me!