சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 10 சுற்றுலா இடங்கள் என்னென்ன? முழு விபரம் இதோ !

By Raghupati R  |  First Published Dec 19, 2022, 10:40 PM IST

சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் சிங்கப்பூர் இன்றளவும் சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது.


பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே முதல் சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் வரை சிங்கப்பூர் அவ்வளவு ரசிக்க கூடிய இடங்கள் உள்ளது. அவைகளில் டாப் 10 என்னவென்று பார்க்கலாம்.

மெரினா பே சாண்ட்ஸ்

Tap to resize

Latest Videos

இது 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டமைக்கப்பட்டது. இது 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது உலகின் மிக விலையுயர்ந்த கட்டிடமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மெரினா பே சாண்ட்ஸில் நீங்கள் கீழ்கண்ட அனைத்தையும் ஒரே இடத்தில பார்க்கலாம். சொகுசு ஹோட்டல், உணவகங்கள், எண்ணில் அடங்காத கடைகள்,  தியேட்டர், ஆர்ட் சயின்ஸ் மியூசியம் என பலவற்றையும் கொண்டுள்ளது. இது செயற்கை பனியால் செய்யப்பட்ட உட்புற சறுக்கு வளையத்தையும் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் ஃப்ளையர்

சிங்கப்பூர் ஃப்ளையர் ஒரு மாபெரும் ராட்டினம் ஆகும். நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது கார்கள் 28 பேர் வரை இதில் அமரலாம். இது 2008 இல் திறக்கப்பட்டபோது, இது உலகின் மிக உயரமான பெர்ரிஸ் சக்கரமாக இருந்தது.  மரினா விரிகுடாவில் அமைந்துள்ள ஃப்ளையர்ஸ் டெர்மினல் மூன்று தளங்களில் உணவகங்கள், கடைகள் போன்றவைகளை கொண்டுள்ளது.

புத்தர் டூத் ரெலிக் கோயில்

சீனர்கள் நிறைய கடவுள்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் கோவில்களை கட்டுகிறார்கள். ஆனால் புத்தர் டூத் ரெலிக் கோவில் மிகவும் வித்தியாசமானது. மத்திய சைனாடவுனில் அமைந்துள்ள இக்கோவில், சிங்கப்பூர் பௌத்தர்களின் பிற கலைகள் மற்றும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது.

நைட் சஃபாரி

சிங்கப்பூர் பயணத்தில் நீங்கள் சோர்வாக இருந்தால் உடனே செல்ல வேண்டிய இடம் இந்த நைட் சஃபாரி தான். இது 1984 இல் திறக்கப்பட்டது முதல், இது சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது. விலங்குகளை ரசித்து கொண்டே, இங்குள்ள மூன்று உணவகங்களில் உணவருந்தி மகிழலாம்.

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா

சிங்கப்பூரில் பட்ஜெட்டில் எதாவது இடம் இருக்கிறதா ? என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது தாவரவியல் பூங்கா.  இங்குள்ள தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தோட்டத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட பகுதியாகும். இந்த தோட்டத்தில் 60,000 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மேலும் இது உலகின் முதல் குழந்தைகளுக்கான தோட்டமாகும். 

கார்டன்ஸ் பை தி பே

கார்டன்ஸ் பை தி பே என்பது சிங்கப்பூரின் சுற்றுலாத் தலங்களில் புகழ்பெற்றதாகும். கார்டன்ஸ் பை தி பே, மத்திய சிங்கப்பூரில் மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று தோட்டங்களைக் கொண்டுள்ளது. தோட்டத்தில் 50 மீட்டர் (160 அடி) உயரம் வரை மரம் போன்ற கட்டமைப்புகளை உள்ளடக்கி உள்ளது.

ராஃபிள்ஸ் ஹோட்டல்

ராஃபிள்ஸ் ஹோட்டல் 1887இல் தொடங்கப்பட்டது. இது இன்றளவும் சிங்கப்பூரின் முகமாக பார்க்கப்படுகிறது.  எழுத்தாளர்கள் ருட்யார்ட் கிப்ளிங், சோமர்செட் மாகம் மற்றும் எர்னஸ்ட் ஹெமிங்வே ஆகியோர் இங்கு தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிளார்க் குவே

கிளார்க் குவே சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள குவே, நகரின் வர்த்தக மையமாக இருந்தது. தற்போது உணவகங்கள், தனித்துவமான பொடிக்குகள், தள்ளுவண்டி விற்பனையாளர்கள் மற்றும் பலவற்றை கொண்டுள்ளது.

ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா

ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா சிங்கப்பூரின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது. இதில் ஹோட்டல்கள், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள், தீம் பூங்காக்கள் என சகல வசதிகளும் அடங்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து மரைன் லைஃப் பார்க், டால்பின் தீவு, நீர் பூங்கா மற்றும் மீன்வளம். சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற பல இடங்களுக்கும் செல்லலாம். கேசினோ போன்ற விளையாட்டுகளும் இங்கே உள்ளது.

ஆர்ச்சர்ட் ரோடு

ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய கடை வீதியாகும். இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். மால்கள், உணவகங்கள், காபி ஷாப்ஸ், கஃபேக்கள், இரவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் என பலவும் ஒரே இடத்தில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை தவற விடுவதில்லை.

இதையும் படிங்க..அப்போ இருந்த இலங்கை போராட்ட களமா இது.? அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வைரல் புகைப்படம் !!

click me!