சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்கினை மீண்டும் அதிபராகத் தேர்வு செய்துள்ளனர். சீனா அரசியல் அமைப்பு படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கூடி பொதுக்குழு மூலம் நாட்டின் அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
அந்த வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. தற்போது மாநாடு முடிவடைந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
இறுதி நாள் கூட்டத்தில் பங்கேற்க, கட்சி நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அதிபர் ஹூஜின்டாவோ வழக்கம்போல்வந்து அதிபர் ஜி ஜின்பிங் கின்இடதுபுறம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த உதவியாளர்கள், ஹூ ஜின்டாவோவின் கையைப் பிடித்து தூக்கி வெளியேறும்படிகூறினர். அவர் சோகத்துடன் வெளியேறினார். அப்போது அவர் அதிபர் ஜி ஜின்பிங்கிடமும், பிரதமர் லீ கேகியாங்கிடமும் ஒரு நிமிடம் பேசிவிட்டு சென்றார்.
வெளியேறும் போது தனது மேஜையில் இருந்த தாள்களை ஹூ ஜின்டாவோ எடுக்கமுயன்றார். ஆனால் அதை எடுக்கவிடாமல், மேஜை மீது தாள்களைஅழுத்தி அதிபர் ஜி ஜின்பிங் பிடித்துக் கொண்டார். முன்னாள் அதிபர் ஹூ ஜின்டாவோ வெளியேறும்போது, அதிபர் ஜி ஜின்பிங்கின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அதற்கு சீன அரசு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அவசரமாக வெளியேறினார் என்றும், அவர் ஓய்வெடுப்பதற்காக கட்சிக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள ஒரு அறைக்கு சக பணியாளார்களால் கூட்டி செல்லப்பட்டார், அவர் இப்போது நலமாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!