சிக்கன் டிக்கா மசாலாவைக் கண்டுபிடித்த பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சமையற் கலைஞர் அலி அகமது இஸ்லாம் கிளாஸ்கோ நகரில் காலமானார். அவருக்கு வயது 77.
சிக்கன் டிக்கா மசாலாவைக் கண்டுபிடித்த பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சமையற் கலைஞர் அலி அகமது இஸ்லாம் கிளாஸ்கோ நகரில் காலமானார். அவருக்கு வயது 77.
உலகளவில் கோழிக்கறி எனப்படும் சிக்கன் அதிகமான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த கோழிக்கறியில் சமையற் கலைஞர்கள் மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகைகள், சுவைகளில், மசாலாக்களைச் சேர்த்து தயாரித்து வழங்குகிறார்கள்.
undefined
ஒவ்வொரு நாட்டிலும் சமையற் கலைஞர்கள் தங்கள் மக்களுக்கு ஏற்றார்போல், பிராந்திய சுவைக்கு ஏற்றார்போல் கோழிக்கறியை சமைத்து வழங்குகிறார்கள்.
ஆனால் கோழிக்கறியில் சில வகைகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பெயரில், மாறுபட்ட சுவையில் வழங்கப்படுகிறதென்றால் அது சிக்கன் டிக்கா மசாலாவாகும். இந்த சிக்கன் டிக்கா மசாலாவை அலி அகமது அஸ்லாம் என்ற சமையற் கலைஞர் 1970களில் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
வேகவைக்கப்பட்ட கோழிக்கறியில் மசாலாக்களைச் சேர்த்து, தக்காளி சாறு, சூப் உள்ளிட்டவைகளை சேர்த்து தயாரித்து வழங்கப்படுவது சிக்கன் டிக்கா மசாலா. வேறுபட்ட சுவையில், சாப்பிடுபவர்களின் நாவை அடிமையாக்கும் வகையில் அலி அகமது அஸ்லாம் சமைத்த சிக்கன் டிக்கா மசாலா பெரும் வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் பரவியது.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஷிசிஸ் மஹால் ரெஸ்டாரன்டில் அலி அகமது அஸ்லாம் பணியாற்றி வந்தநிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு காலமாகினார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அந்த உணவுவிடுதி 48 மணிநேரம் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவு விடுதி வெளியிட்ட செய்தியில் “ ஷிஸ் பிரியர்களே, அலி அகமதுஇன்று காலை காலமாகிவிட்டார், அவரின் மறைவு எங்களின் இதயத்தை நொறுங்கச் செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Year Ender 2022: 2022ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் திருப்பு முனைத் தீர்ப்புகள்
அலி அகமதுவின் உறவினர் அந்த்லீப் அகமது கூறுகையில் “ அலி அகமதுவுக்கு ரெஸ்டாரண்ட்தான் உலகம். தூங்கும் நேரத்தைத் தவிர ஏதாவது ஒன்றை சமைத்துக்கொண்டே இருப்பார். மதிய உணவுக்கு அவரின் கையால் சமைக்கப்பட்ட உணவுக்காக பலரும் காத்திருப்பார்கள். மற்றவர்களுக்குத்தான் சிக்கன் டிக்கா மசாலாவை செய்து கொடுத்துள்ளார், ஆனால், ஒருமுறை கூட அலி அகமது சாப்பிட்டு பார்த்தது இல்லை” எனத் தெரிவித்தார்.
சிக்கன் டிக்கா மசாலா எப்படி பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து அலி அகமது கடந்த 2009ம் ஆண்டு ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் “ சிக்கன் டிக்கா மசாலாவை ஒரு வாடிக்கையாளர் கேட்டிருந்தார், அவருக்கு அதை பரிமாறியபோது, அது மிகவும் வறண்டு இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த வாடிக்கையாளர் சிக்கன் டிக்கா மசாலாவில் சிறிது தக்காளி சாஸ் ஊற்றிக்கொள்ளட்டுமா எனக் கேட்டார்.
சீனா கார் மார்க்கெட்டை இந்தியா பிடிக்க 140 ஆண்டுகள் தேவை - மாருதி சுசுகி சேர்மன் பார்கவா தகவல் !
இதையடுத்து, சிக்கனை தக்காளி சாஸில் ஏன் வேகவைத்து இந்த நாட்டு மக்களுக்காக வழங்கக்கூடாது எனத் தோன்றி அதுபோலே சமைத்துக் கொடுத்தன், அதில் யோகர்ட், கிரீம், சில மசாலாக்களைச் சேர்த்து செய்தேன். இந்த சிக்கன் டிக்கா மசாலா பிரிட்டன் ரெஸ்டாரன்ட்களில் சக்கைபோடு போட்டது. இதிலிருந்து சிக்கன் டிக்கா மசாலாவை வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப சமைத்துக்கொடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
சிக்கன் டிக்கா மசாலா என்பது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் பூர்வீக உணவாகும். அங்கிருந்து இளம் வயதில் அலி முகமது புறப்பட்டு கிளாஸ்கோ நகருக்கு குடிபெயர்ந்தார். அதன்பின் 1964ம் ஆண்டு கிளாஸ்கோ நகரில் ஷிசிஸ் மஹால் எனும் ரெஸ்டாரண்டை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது