சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட Scoot விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில், அவ்விமானம் மீண்டும் சாங்கி விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதுதொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு ஸ்கூட் விமானம் நேற்று மாலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக விமானம், அனைத்து பயணிகளுடன் மீண்டும் சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்திற்கு திருப்பப்பட்டு, தரையிறக்கப்பட்டது.
பின்னர், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் 30 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த நபரை சிங்கப்பூர் விமானநிலைய போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, மாலை சுமார் 5 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியுள்ளது. மேலும், பாதுகாப்பு மிரட்டல் தொடர்பான புகார்களை அவ்வளவு எளிதில் எடுத்துக்கொள்வதில்லை என்றும், வேண்டுமென்றே மக்களிடையே பீதியை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்ப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!
Scoot விமான நிறுவனமும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதனிடையே, பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு Scoot விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D