ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் தற்போது திறமையான தொழிலாளர்கள் இல்லாமல் தவித்து வருகிறது.
உலகின் பணக்கார நாடுகளில் லக்சம்பர்க் நாடும் ஒன்றாகும். ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் தற்போது திறமையான தொழிலாளர்கள் இல்லாமல் தவித்து வருகிறது. அந்நாட்டில் திறமையான தொழில் வல்லுனர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், லக்சம்பர்க் அரசாங்கம் இந்தக் குறைபாட்டை நீக்க முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இதற்காக புதிய சட்டத்தை கொண்டு வரவும் அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.
Flying Abroad என்ற நிறுவனம் இதுகுறித்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி லக்சம்பர்க்கில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை என்பதால் அங்கு வேலை கிடைப்பது சுலபம் என்றும், அங்கு அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 2 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னதாக, லக்சம்பேர்க்கில் ஐரோப்பிய குடிமக்களுக்கு வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, ஆனால் இந்த விருப்பம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களுக்கும் வேலை கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் லக்சம்பர்க்கில் வேலைக்கு சேரும் நபர் தன் குடும்பத்தினரை அழைத்து வர வேண்டும் என்றால், அவர்களுக்கு தனி விசா பெற வேண்டியதில்லை.
புதிய சட்டத்தின்படி, உங்கள் வேலை லக்சம்பர்க்கில் கிடைத்தால், ஐந்து நாட்களுக்குள் விசா வழங்கப்படும். அதே நேரத்தில், படிப்புக்குப் பிறகு வேலை தேடுவதற்கான விசாவின் காலம் 9 முதல் 12 மாதங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வயசோ 16 தான்.. AI நிறுவனத்தை ஆரம்பித்து சவால்விடும் ப்ராஞ்சலி அவஸ்தி யார் தெரியுமா.?
லக்சம்பர்க் ஐடி நிறுவனங்களின் மையமாக இருப்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.. இங்கு உங்கள் சராசரி சம்பளம் ஆண்டுக்கு 55 லட்சம் முதல் 65 லட்சம் வரை இருக்கலாம். உங்களுக்கு பணி அனுபவம் இருந்தால், உங்கள் சம்பளம் வருடத்திற்கு 2 கோடி வரை இருக்கக்கூடும். அதே நேரத்தில், நீங்கள் லக்சம்பர்கிஷ் மொழியைக் கற்றுக்கொண்டால், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய சட்டம் செப்டம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல், நிதி, வணிக ஆதரவு மற்றும் கட்டிட வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி உலகின் பணக்கார நாடாக கருதப்படும் லக்சம்பர்க், குழந்தைகளை வளர்க்க சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.