இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடுங்க வைக்கும் பயங்கர தாக்குதல்; வீடியோவை வெளியிட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!!

By Dhanalakshmi G  |  First Published Oct 13, 2023, 10:13 AM IST

பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அக்டோபர் 7 ஆம் தேதி நடத்திய தாக்குதலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.


ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலிய ராணுவ தளத்தை தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.  கிசுஃபிம் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.  கான் யூனிஸின் கிழக்கே ராணுவ முகாமில் இருந்த இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான 'அல் அக்ஸா ஃபிளட்' என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேலில் சிக்கி தவித்த இந்தியர்கள்!விமானம் மூலம் 212 பேர் மீட்பு-ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்!!

Tap to resize

Latest Videos

கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி இருந்தனர். ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைககளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது போராக மாறியுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இவர்களை விடுவிக்க இஸ்ரேல் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 60 பேர் மீட்கப்பட்ட நிலையில், 25 பேர் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Vidéo de l'assaut d'une base militaire de Tsahal. Le Hamas a arrêté les soldats terroristes d'Israël déclarés par l'ONU pour leurs crimes humains contre les civils. pic.twitter.com/m35wqLwC2n

— Alia 🦋 (@Aliiaakhh)

தற்போது ஹமாஸின் உச்சபட்ச கமாண்டோவான நுக்பா படையின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 4000 டன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

காசாவில் 50,000 கர்ப்பிணிகளுக்கு குடிநீர் இல்லை; அரபு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம்!!

Scenes of the attack on the Israeli military base of Al-Qassam Brigade, several tanks were destroyed pic.twitter.com/ZikBzeDKBO

— Zain Rajpoot (@zain_rajpoot39)
click me!