சூடானில் மோதல் வெடிப்பதற்கு முன்பே, முன்னாள் அதிபர் சிறையில் இருந்து மாற்றம்.. புதிய தகவல்.

By Ramya s  |  First Published Apr 26, 2023, 4:26 PM IST

சூடானின் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் அல்-பஷீர் மோதல்கள் வெடிப்பதற்கு முன்பே ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவ படையினர் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை கைப்பற்றினர். இதனால் அங்கு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது. இருதரப்பிரனரும் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருவதால் சூடான் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இந்த மோதலில் இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றி வருவதால் அங்கு தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நைல் நதிக்கரையில் உள்ள கார்ட்டூமின் அருகில் உள்ள நகரங்களில் ஒன்றான ஓம்டுர்மானில் இரவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன, அங்கு  ஆளில்லா விமானங்கள் துணை ராணுவத்தை குறிவைக்க வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : Breaking : சத்தீஸ்கரில் நக்சல் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.. 11 சிறப்பு காவல் படை வீரர்கள் பலி..

இந்நிலையில் சூடானில் உள்நாட்டு மோதல் தொடங்குவதற்கு முன்பே, பதவி நீக்கம் செய்யப்பட்ட சூடான் அதிபர் உமர் அல்-பஷீர்,  கோபர் சிறையில் இருந்து சூடான் தலைநகரில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டுகளாக சூடானை ஆட்சி செய்த உமர் அல்-பஷீர்,  2019-ம் ஆண்டு ஏற்பட்ட போராட்டத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கொடூர சர்வாதிகார ஆட்சியாளராக அவர் செயல்பட்டு வந்தார். அவரின் ஆட்சிக்காலத்தில் சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் நடந்த மோதலின் போது இனப்படுகொலை உள்ளிட்ட பல குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பஷீர் மற்றும் சூடான் அமைச்சர் ஹாரூன் இருவரையும் தேடுகிறது.

சூடானிய இராணுவம் மற்றும் துணை இராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியின் போது அல்-பஷீரை அதிகாரத்தில் இருந்து அகற்றியது. ஆனால், இப்போது தலைநகர் முழுவதும் ராணுவம் மற்றும் துணை ராணுவம் சண்டையிட்டுக் கொள்கின்றன. அந்த வகையில் இந்த மோதல் உமர் அல் பஷீர் வரை சிறை வரை சென்றது.  சூடான் ராணுவம், துணை ராணுவ சீருடைகளை அணிந்து கொண்டு சிறை மீது தாக்குதல் நடத்தி கைதிகளை விடுவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது. எனினும் ஹம்டன் டகாலோ தலைமையிலான துணை ராணுவம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. 

இதனிடையே சூடானுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் வோல்கர் பெர்தஸ் இதுகுறித்து பேசிய போது "இதுவரை சில பகுதிகளில் வைத்திருப்பதாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார். எந்தவொரு கட்சியும் "தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை, மற்றவர்களுக்கு எதிராக இராணுவ வெற்றியைப் பெறுவது சாத்தியம் என்று இருவரும் நினைக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

எனினும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர, ராணுவம் மற்றும் துணை ராணுவம் தீவிரமாக பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : Fact check : வாகனத்தில் அதிகமாக பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடுமா..? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன..?

click me!