கனடாவைச் சேர்ந்த உணவு எழுத்தாளர் ஒருவர் தனது குழந்தையின் உணவில் செய்த குறிப்பிடத்தக்க மாற்றம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கு ஆகியவை உலகளவிலான பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் படிப்படியாக மீண்டு வந்தாலும், உலகின் பல இடங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இருப்பினும், மக்களின் ஊதியம் அப்படியே உள்ளது. இதன் விளைவாக, தற்போதைய பொருளாதாரத்தில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்த நிலையில் கனடாவைச் சேர்ந்த உணவு எழுத்தாளர் ஒருவர் தனது குழந்தையின் உணவில் செய்த குறிப்பிடத்தக்க மாற்றம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆம். அவர் தனது குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற பூச்சியை சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க : ஹெல்த் டிப்ஸ்: கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏன் வருகிறது? குறைப்பதற்கான வழிகள் என்ன?
டொராண்டோவைச் சேர்ந்த டிஃப்பனி லே, தனது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு வழிகளில் பரிசோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, அவர் தனது 18 மாத குறுநடை போடும் குழந்தையின் உணவில் கிரிக்கெட் என்ற ஒரு வகை பூச்சியை சேர்க்க முடிவு செய்தார்.
குழந்தைக்கு புரத சத்து கிடைக்கவும், குடும்பத்தின் மளிகைக் கட்டணத்தைக் குறைக்கவும் இந்த வகை பூச்சிகளை சேர்ப்பதை ஏற்றுக்கொண்டதாக அந்தப் பெண் கூறினார். இதுகுறித்து பேசிய அவர் " உணவு எழுத்தாளர் என்ற முறையில், நான் எப்பொழுதும் பூச்சிகளை உண்ணுதல் உள்ளிட்ட எதையும் முயற்சி செய்து வருகிறேன். தேள் உள்ளிட்ட பல பூச்சிகளை நான் உணவில் சேர்த்துள்ளேன். விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், கிரிக்கெட் பூச்சி தின்பண்டங்கள், கிரிக்கெட் புரோட்டீன் பவுடர் மற்றும் முழு வறுத்த கிரிக்கெட்டு பூச்சிகள் என பல வகை உணவில் இருந்து புரோட்டீனை பெற முடிவு செய்தேன்."
இதனால் எனது மளிகைச் செலவுகளை வாரத்திற்கு சுமார் 8,000 குறைத்தேன். இந்த மாற்றத்திற்கு முன்பு செலவுகள் வாரத்திற்கு சுமார் 25 ஆயிரமாக இருந்தது. இப்போது அது 8,000 வரை குறைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் அந்த மாற்றத்திற்குத் தன் குழந்தை எப்படித் தகவமைத்துக் கொண்டது என்பதைப் பற்றிப் பேசிய அந்தப் பெண், தன் குழந்தை பூச்சியைப் பார்க்க பயப்படவில்லை என்று கூறினார். தனது குழந்தை புதிய உணவை அச்சமின்றி முயற்சி செய்யக்கூடிய வயதில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் வீனஸ் கலாமியின் கூற்றுப்படி, மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 மாத வயதை எட்டியவுடன் பூச்சிகளை ஊட்டலாம் என்றும் டிஃப்பனி லே குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : உள்நாட்டு போரால் உச்சக்கட்ட பதற்றம்.. சூடானில் உள்ள இந்தியர்களின் நிலை என்ன..?