கஞ்சா கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது.
சிங்கப்பூரில் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார். 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் டயாமார்ஃபைன் என்ற தடை செய்யப்பட்ட பொருளுடன் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். நாகேந்திரன் தமது தொடைப்பகுதியில் உறை ஒன்றில் கட்டி சிங்கப்பூருக்கு கடத்தி வந்தார் என்பது வழக்கு ஆகும்.
இவ்வழக்கில் நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம். இதனடிப்படையில் கடந்த் ஆண்டு நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டார்.
இந்த நிலையில், 46 வயதான தங்கராஜூ சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு 1 கிலோவுக்கும் அதிகமான (2.2 பவுண்டுகள்) கஞ்சாவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற போது அந்நாட்டு அரசால் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2018-ம் ஆண்டு சுப்பையா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க..தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?
இதையடுத்து சட்டப் போரட்டம் நடைபெற்றது. மேல் முறையீடு செய்யப்பட்டன. நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகும் தங்கராஜூ சுப்பையாவுக்கு சாதகமான தீர்ப்பு வராத காரணத்தால், தங்கராஜூ சுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டார்.
தங்கராஜு சுப்பையா (46) என்பவரின் தூக்கு தண்டனை சாங்கி சிறை வளாகத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதாக சிங்கப்பூர் சிறைத்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சிங்கப்பூருக்கான ஐநா மனித உரிமைகள் அலுவலகம் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..Gold Rate Today : நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்த தங்க விலை..எவ்வளவு தெரியுமா?