சிங்கப்பூரில் கட்டிட கட்டுமான பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அடுத்த 2 மாதங்களுக்குத் தனது சோதனை நடவடிக்கைகளை 50 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு விதிமீறல் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட நிறுவனங்களில் மறு தணிக்கைக்கு உட்படுத்த சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 9 மாதப் பாதுகாப்பு உயர் பாதுகாப்பு காலம் கடந்த மே மாதம் 31ம் தேதியோடு முடிவடைந்தது.
அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட சில நடவடிக்கைகள், சில குறைபாடுகளுடன் இன்னுமும் தொடர்வதோடு, புதிய சில திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கட்டுமானம், உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளில் விபத்து நேரும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
நான் முழுசா திருப்தி அடையவில்லை.. காசை திருப்பிக்கொடு.. 2 முறை உறவில் இருந்துவிட்டு பெண்ணை தாக்கிய கொடூரன்!
அதிக ஆபத்து கொண்ட அது போன்ற தொழிற்துறைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த, அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன என சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சில கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு விதி மீறல்கள் இடம்பெறுவதை மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
சென்னை - சிங்கப்பூர் இடையேயான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை.. முன்பதிவு தொடக்கம் - முழு விபரம் உள்ளே