சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகளை மிகவும் மோசமாக நடத்திய வழக்கில் 33 வயது பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிங்கப்பூர் போலீஸார் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில், தங்களுக்கு ஒரு புகார் கிடைத்ததாக காவல்துறை கூறியது, அந்த புகாரில், சிங்கப்பூரில் உள்ள ஒரு பாலர் பள்ளி ஆசிரியர், இளம் குழந்தைகளை கொடூரமாக நடத்தியது குறித்த வீடியோ ஒன்று ஆன்லைனில் பரவி வருவதாக அதில் கூறப்பட்டிருந்தது.
சிங்கப்பூரின் வூட்லண்ட்ஸ் மார்ட் பகுதியில் உள்ள ஒரு Kinderland Preschoolலில் நடப்பது போன்ற 3 வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஒரு ஆசிரியர், அருகில் இருக்கும் சின்னச்சிறு குழந்தைகளை கடுமையாக நடத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் கொண்டாடும் தமிழின் பெருமை! ''தமிழ் இளைஞர் திருவிழா''!
அந்த வீடியோவில், ஆசிரியர் ஒருவர் குழந்தைகளின் தலையைப் பின்னால் இருக்க பிடித்துக் கொண்டு தண்ணீரைக் குடிக்கும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதைக் காணமுடிந்தது. மேலும் அந்த ஆசிரியர் பயங்கரமாக கத்தி, அருகில் இருந்த ஒரு குழந்தையை கொடூரமாக புத்தகத்தால் தாக்கும் கட்சிகளும் இடம்பெற்றிருந்தது.
இந்த பாலர் பள்ளி, பாராளுமன்ற உறுப்பினர் போ லி சானின் செம்பவாங் மேற்கு வார்டுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உதவவிருப்பதாக தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். மேலும் அந்த ஆசிரியர் ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடத்திற்காக வேறொரு பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர் விசாரணைகளை அடுத்து தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நாளை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$8,000 (சுமார் 4 லட்சம் ரூபாய்) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
சீனாவின் புதிய வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்; ஜி20 மாநாட்டுக்கு முன்பு இந்தியாவை உசுப்பும் பீஜிங்!!