விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உயிரிழப்பு !! சாலை விபத்தில் மரணம் !!

By Selvanayagam PFirst Published Feb 23, 2019, 7:48 AM IST
Highlights

விழுப்புரம் தனித் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்  கூட்டேரிப்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ராஜேந்திரனுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தலில் நிற்க மறைந்த முதலமைச்சர் ஜெயலிதா வாய்ப்பு தந்தார்.

இதையடுத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி பெற்று எம்.பி.யானார். இவரது பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. 

இதனிடையே நேற்று மாலை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். மேலும் முதலமைச்சருக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் ராஜேந்திரன் பங்கேற்றார்.

இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது சொந்த வேலை காரணமாக காரில் ஜக்காம்பட்டியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

கூட்டேரிப்பட்டு அருகே சென்றபோது சாலையில் இருந்த தடுப்புச் சுவர் மீது அவரது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

click me!