மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற பதற்றம் இருந்து வரும் நிலையில், தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்போது மோடி அல்லாத வேறு ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளவும் பாஜக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
அதே நேரத்தில் இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்ற சூழ்நிலையே உள்ளதாக கருத்துக் கணிப்பு தகல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிர முயற்சி மேறகொண்டுள்ளன.
undefined
இதன் முதல் கட்டமாக ரிசல்ட் வரும் முன்பே காங்கிரஸ் கூட்டணி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் வரும் 21 ஆம் தேதி அனைத்தக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் எப்படி ஆட்சி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதே போல் பாஜகவும் ஆட்சி அமைப்பது குறித்து பல வியூகங்களை அமைத்துள்ளது. இந்த முறை பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், அக்கட்சி மாநில கட்சிகளின் உதவியை நாடியுள்ளன.
தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிடம் பேசி வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பல எதிர்க்கட்சிகள் மோடி மீண்டும் பிரதமர் ஆவரை விரும்பவில்லை. இதனார் பாஜகவுக்கு ஆதரவி அளிக்க தயக்கம் காட்டி வருகின்றன.
இதனால் பாஜகவில் உள்ள தலைவர்கள் யாரையாவது பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். யார் அது அதன்படி பாஜக அமைச்சர் நிதின் கட்கரியை, பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளது.
ஆனால் சில மாநில கட்சிகள் இவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இவர் ஆர்எஸ்எஸ் நபர் என்பதால் இவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. பாஜக அல்லாத கட்சியை சேர்ந்த நபர் இதனால் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகிறது.
அதன்படி மக்களவைத் தேர்தலில் மெஜாரிட்டி பெறவில்லை என்றால் பாஜக கூட்டணி மோடிக்கு பதிலாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்தாலும், பிரதமர் மோடிக்கு கொஞ்சம் எதிரானவர். இதனால் இவரை சில மாநில கட்சிகள் ஏற்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.