சசிகலாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு !! சிறையில் அவசர சிகிச்சை…

By Selvanayagam PFirst Published Aug 30, 2018, 7:55 PM IST
Highlights

அம்மா மக்கள் முன்னேற்றக கழக பொதுச் செயலாளரும், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருப்பவருமான சசிகலாவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்தால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போதிருந்தே  சசிகலா சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து  ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படடது.

அப்போது சசிகலா  உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் சிறையில் அடைக்கபபட்ட பின்னர் அவரது கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், நடராஜன் மறைந்த போதும் சிறையில் இருந்து பரோலில் வந்தார். அதைத் தவிர சசிகலா தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையிலேயே உள்ளார்.

சிறையில் அவருக்கு சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளிக்கபபட்டு வந்தது. இந்நிலையில்  இன்று சசிகலாவின் ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்த அவர் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

click me!