வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் வைத்த ஆப்பு!! ஒரு நாளைக்கு இவ்வளவுதான் செலவு பண்ண முடியும்…

By Selvanayagam PFirst Published Nov 26, 2018, 8:22 AM IST
Highlights

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு நாளொன்றுக்கு 10,000  ரூபாய் மட்டுமே  ரொக்கமாக செலவழிக்கலாம் என தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே 20 ஆயிரம் ரூபாயாக இருந்ததை தற்போது 10 ஆயிரமாக குறைத்துள்ளது.

தேர்தல் என்றாலே பணப்புழக்கம் அதிகமாகும், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலின்போது கோடிக் கணக்கான ரூபாய் செலவி செய்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்குத் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கட்சிகள் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் அதிகளவு பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில், வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்துக்காக செலவிட அனுமதிக்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக தேர்தல் கமிஷன் குறைத்து உள்ளது. இந்த உத்தரவு, இம்மாதம், 12 முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இதேபோல், தனிநபர் அல்லது நிறுவனத்திடம் இருந்தும் ரூ.10,000க்கு அதிகமாக நன்கொடையோ அல்லது கடனோ வேட்பாளர்கள் பெறக் கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!