தளபதியின் GOAT பட ஷூட்டிங்.. ரசிகர்களோடு Selfie எடுத்துக்கொண்ட விஜய் - 2 மணிநேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து!

Feb 5, 2024, 8:22 PM IST

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் GOAT. இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகின்றது. இதனை ஒட்டி நடிகர் விஜயை காண ஏராளமான இளைஞர்களும், ரசிகர்களும் ஒன்று கூடியதால் கடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுமார் 2 மணி நேரமாக கடலூர் சாலையில் செல்லும்  பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனை அடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் தோன்றிய நடிகர் விஜய், தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த விஜய் ரசிகர்கள், அவர் மீது பூக்களை தூவியும் போட்டோக்கள் எடுத்தும் ஆரவாரமாக கைத்தட்டி மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து  ரசிகர்களுடன் தனது மொபைல் போனில் நடிகர் விஜய் செல்பி எடுத்துக் கொண்டார். அப்பொழுது ஏஎப்டி பஞ்சாலை முன்பு கூடி இருந்த ரசிகர்கள் பலூன்களை வானத்தில் பறக்க விட்டும் விசில் சத்தங்கள் எழுப்பியும் ஆரவாரமாக கைதட்டி உற்சாகமடைந்தனர். பிறகு விஜய் அங்கிருந்து புறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர், பின் போக்குவரத்து சீரானது.