Velmurugan s | Published: Mar 19, 2025, 4:01 PM IST
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பத்திரமாகப் இன்று பூமி திரும்பிய நிகழ்வை, அவரது பூர்வீகக் கிராமமான ஜூலாசனில் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.சுமார் 17 மணி நேர பயணத்திற்குப்பிறகு சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் இன்று அதிகாலை 3.57க்கு பூமியை வந்தடைந்தனர். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் வருகைக்காக விடிய விடிய கண்விழித்துக் காத்திருந்த அவரது பூர்வீகா கிராம மக்கள் இந்நிகழ்வை ஆரத்தி எடுத்தும், ஆடிப்பாடியும், பட்டாசு வெடித்தும் திருவிழா போன்று கொண்டாடியுள்ளனர்.