
26 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தோல்வியடைய செய்த இந்தியா!
Operation Sindoor : வடக்கில் பாரமுல்லாவிலிருந்து தெற்கில் பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களின்படி, வடக்கில் பாரமுல்லாவிலிருந்து தெற்கில் பூஜ் வரை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. இந்தியா அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.