
Breaking News : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.