Velmurugan s | Published: Apr 6, 2025, 2:00 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால், இது அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கு சமம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நாட்டுக்கு மிகவும் அவசியம் என பாஜக தெரிவித்து வருகிறது.எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தவறாக நினைப்பவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை மட்டுமே ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடுகிறோம். ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரிக்கவில்லை என்றாலும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான நடைமுறையை குடியரசுத் தலைவர் தொடங்குவார்” என்று தெரிவித்தார்.