தவெகவில் இணைந்த செங்கோட்டையன்....வீடியோ வெளியிட்டு வரவேற்ற தவெக தலைவர் விஜய் !

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்....வீடியோ வெளியிட்டு வரவேற்ற தவெக தலைவர் விஜய் !

Published : Nov 27, 2025, 05:03 PM IST

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டள்ள வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம், 20 வயது இளைஞராக இருக்கும்போதே புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதிலேயே எம்எல்ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின்னர் அவருடைய பயணத்தில் அந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று அவருக்கும், அவருடன் இணைந்து நம்முடன் பணியாற்ற கை கோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லது நடக்கும், நல்லதே நடக்கும், நல்லது மட்டுமே நடக்கும். வெற்றி நிச்சயம்..!” என்று குறிப்பிட்டுள்ளார்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி