
‘தளபதி’ விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது . இதில் படிப்புல சாதிக்க வேண்டும் தான் ...படிப்பும் சாதனை தான் அதை நான் மறுக்கவில்லை ...அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் வெற்றி அடைய வேண்டும் சாதிக்க வேண்டும் என்று இருப்பது சாதனை கிடையாது . இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் நீட் தேர்வு மட்டும் தான் உலகமா ? நீட் தேர்வை தாண்டி இந்த உலகம் மிகவும் பெரிது நாம் சாதிக்க வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கிறது . எல்லா துறைகளிலும் நாம் சாதிக்க வேண்டும் என்று TVK தலைவர் தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார் . மேலும் மாணவிகளின் அசத்தலாக பேசினார்கள் ...அதை வியப்போடு பார்த்தார் விஜய் .