
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். ஒருங்கிணைந்த அதிமுக என்பது விரைவில் எதிர்பார்க்கலாம், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது அது நல்ல முடிவாக இருக்கும். பாஜக எப்போதுமே எனக்கு அழைத்து அறிவுறுத்தலும்( INSTRUCTION ) கொடுத்தது இல்லை, நான் அமித்ஷாவை நேரில் பார்த்தேன் அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது என்று பேசினார் .