திருவள்ளூரில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியை வரவேற்று வைக்கப்பட்ட பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பலத்த காற்றால் தாக்குப் பிடிக்க முடியாமல் உதயநிதி ஸ்டாலினின் கட் அவுட் அப்படியே சரிந்து ஆட்டோ மீது விழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.