துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழகத்தின் நலனுக்காக ஒரு நாளும் பாடுபடாத தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் திமுகவை பார்த்து கேள்வி மட்டும் கேட்பார் என்று ஒப்புதல் வாக்குமூலம் போல ஒரு உளரல் வாக்குமூலத்தை கொடுத்து இருக்கிறார்பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், ராமன் வில்லில் இருந்து புறப்படுகிற அம்பை போல எதிரிகளுக்கு சிம்மசொப்பனம் போல தினந்தோறும்,தினந்தோறும் கேள்விக் கணைகளாலே ஆளுகிற கட்சியின் மக்கள் விரோத போக்கினை தனக்கே உரிய பாணியிலே தோலுரித்துக் காட்டி, மக்களுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காணுவதற்கு தன்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிற எடப்பாடியாரை பற்றி உதயநிதி சொன்ன கருத்து அரசியல் கத்துக்குட்டியாகத்தான் தெரிகிறது.