Velmurugan s | Published: Mar 28, 2025, 5:00 PM IST
இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும்,'' என்று கட்சி பொதுக்குழுவில் நடிகர் விஜய் பேசினார். தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி அமைந்ததும் பெண்கள் பாதிப்பை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு நல்லா வைத்து இருப்போம். கல்வி, சுகாதாரம் அனைத்திலும் கவனம் செலுத்துவோம். அதுவும் எல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்கிற மாதிரி செய்வது தான் எங்களுடைய டார்கெட். எப்பொழுதும் உழைக்கிறவர்கள் பக்கம் தான். நமது தமிழகம் இயற்கை நிறைந்த பூமி. மக்களை பாதிக்கிற மாதிரி திட்டங்களை செயல்படுத்தாதீர்கள். இவ்வாறு விஜய் பேசினார்