
தமிழக வெற்றுக் கழகத்தின் தலைவர் நேற்று முன்தினம் மலேசியாவில் ஆடியோ ரிலீசுக்காக சென்றிருந்தார். அந்த கூட்டத்தை பார்க்கின்ற பொழுது அண்டை நாடான மலேசியா வியக்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி, உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியாவை பொருத்தவரை பிரதமர் , குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியிருப்பார்கள். இந்த முறை இவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள் இளைஞர்கள் என 18 முதல் 35 வரை இருப்பவர்கள் ஒரு மனதாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகாவுடன் இணைவது குறித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு , பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கருத்துக்களை பொருத்தவரை என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை . எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்வார்கள் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும் . என கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி.