சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?

Ansgar R |  
Published : Jun 06, 2024, 11:00 PM IST

Savukku Shankar : திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் சொந்த ஜாமினில் விடுவிடுவிக்கப்பட்டார். 

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை பற்றி தவறாக பேசி நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் தடுபட சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கோவை சிறையில்  உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அவர் கூறியதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

இந்த நிலையில், திருச்சயில் அவர் மீது முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 4ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு உதவி ஆய்வாளர் லதா திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சங்கர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணைக்காக இன்று சென்னை புழல் சிறையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். சவுக்கு சங்கர் இந்த வழக்கில் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்ற  காவலுக்கும் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்ராவிடவில்லை. அதனைத்தொடர்ந்து மீண்டும் புழல் சிறைக்கு சவுக்கு சங்கர் கொண்டு செல்லப்பட்டார்.

20:24அண்ணாமலை எதிர்த்து.."பிராமணர்" டெபாசிட் கூட வாங்க முடியாது..! இதோ அந்த strategy toolkit !
01:56சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டி முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் கோப்பை தட்டிச் சென்றனர்
03:16ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தை அமாவாசை சிறப்பு பூஜை - ஏராளமான பக்தர்கள் வருகை !
02:14பேருந்துகள் குறைந்த அளவிலே இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி பேருந்தில் இடம் பிடித்து சென்ற அவலம்
03:53இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தம் நினைவுநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை
03:11காளிங்கராயன் கால்வாயை வெட்டிய காளிங்கராயரின் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
03:412026 அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
03:12காணும் பொங்கல் திருநாளில் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிப்பு – குடும்பத்துடன் மகிழ்ச்சி !
02:141952ல் வெளி வந்த பராசக்தி பார்த்துவிட்டேன் கமல்ஹாசன் கருத்தை அன்போடு வழிமொழிகிறேன் - வைரமுத்து
02:54த.வெ.க சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறபித்தனர்
Read more